தளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

palane

கிளிக் பண்ணுங்கோ

Saturday, 5 March 2011

தாய்ப்பால் ஊட்டுதல்



குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே உணவும் பானமும் ஆகும். சாதாரனமாக வேறு எந்த உணவோ அல்லது பானமோ இந்த காலகட்டத்தில் தேவையில்லை.

தாய்ப்பால் மட்டுமே பிறந்த குழந்தைகளுக்கு தேவையான ஒரே உணவாகும். மிருகங்களின் பாலோ, குழந்தைகளுக்கான பால்பவுடர், டீ, இனிப்பு பானங்கலோ, தண்ணீர் அல்லது, தானிய உணவுகளோ, தாய்ப்பாலை விட சிறந்தது அல்ல.

தாய்ப்பாலே குழந்தைக்கு எளிதாக செமிக்கக் (சமிபாடடையக்) கூடியது. அது தான் சிறந்த வளர்ச்சி, முன்னேற்றம், மற்றும், நோய்களிலிருந்து பாதுகாப்பும் அளிக்கிறது.

சூடான, வறட்சியான காலங்களில் கூட தாய்ப்பால், சிறு குழந்தையின் நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. தண்ணீர் அல்லது பிற பானங்களோ பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தேவையில்லை. தாய்ப்பாலை தவிர குழந்தைக்கு மற்ற உணவோ பானமோ தருவது, பேதி அல்லது மற்ற நோய்கள் வருவதற்க்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

ஆறு மாதத்திற்கு குறைவான தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தையின் எடை கூடவில்லையெனில்:
குழந்தைக்கு மேலும் அடிக்கடி தாய்ப்பால் தேவைப்படலாம். 24 மணி நேர கால அவகாசத்தில் குறைந்த பட்சம் 12 முறையாவது தாய்ப்பாலூட்ட வேண்டும். குழந்தை சுமார் 15 நிமிடத்திற்காவது உறிஞ்ச வேண்டும்.

குழந்தைக்கு நன்றாக மார்பகத்தை வாயின் உள் வைத்து கொள்ள உதவி தேவைப்படலாம்.

குழந்தை உடல் நிலை சரியில்லாமல் இருக்கலாம், ஒரு தேற்சிப்பெற்ற சுகாதார துறை ஊழியரிடம் காண்பிக்க வேண்டும்.

தண்ணிரோ அல்லது மற்ற பானங்களோ தாய்ப்பால் குடிக்கும் அளவை குறைத்து இருக்கலாம். தாய் மற்ற பானங்கள் தருவதை தவிர்த்து தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும்.

ஆறு மாதத்திற்கும் மேலான குழந்தைக்கு மற்ற உணவும் பானமும் தேவை. ஆனால் தாய்ப்பால் தருவதை 2 வயதிற்கு மேலும் தொடரவேண்டும்.

எச் ஐ வி (எயிட் நோயால்)யால் பாதிக்கப்பட்ட பெண், தாய்ப்பால் மூலம் சிசுவிற்கு வியாதியை தொற்றுவிப்பதற்கான அபாயம் உள்ளது. இந்த வியாதியால் பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது பாதிக்கப்பட்டிருப்போமோ என்று சந்தேகமுள்ள பெண்கள், தேர்ச்சிபெற்ற சுகாதார ஊழியரிடம் ஆலோசனையைப் பெற்று கொள்ள வேண்டும். இதற்கான சோதனை முறைகள், பரிந்துரைகள், மற்றும் சிசுவிற்கு இது பரவுவதை தடுப்பதர்க்கான வழிகள் ஆகியவற்றை பற்றி அவரிடம் தெரிந்து கொள்ள வேண்டும்.

எச் ஐ வி தொற்று நோய் வராமல் தவிர்ப்பதற்கான வழிகளை எல்லோரும் தெரிந்து கொள்வது முக்கியம். கர்ப்பினிகளும், புதிய தாய்மார்களும், தங்களுக்கு எச் ஐ வி இருந்தால், கர்ப்பகாலத்திலோ, பிரசவத்தின் போழுதோ, அல்லது தாய்ப்பாலூட்டும் போதோ, குழந்தைக்கு இந்த நோய் பரவ கூடும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நோய் வராமல் தவிர்ப்பதே நோயை பரப்பும் அபாயத்தை தவிற்கும் சிறந்த வழி ஆகும். உடலுறவை தவிர்பதே பாலுறவு மூலம் எச் ஐ வி நோய் தொற்றாமல் தடுக்க சிறந்த வழி. நோயால் பாதிக்கபடாதவர்கள் ஒருவருடன் மட்டும் உடலுறவு கொள்வதால் அல்லது பாதுகாப்புடன் உடலுறவு கொள்ளவதால் அல்லது ஆணுரை உபயோகிப்பது அல்லது உறுப்புக்கள் முழுவதும் இணையாமலிருப்பது போன்றவற்றால் இந்நோய்த்தொற்றை குறைக்கலாம்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட அல்லது சந்தேகம் இருக்கும் கர்ப்பிணிகளோ அல்லது பிரசவித்த தாய்மார்களோ, தேர்ச்சிபெற்ற மருத்துவ பணியாளர்களிடம் பரிந்துரை பெற்று கொள்ள வேண்டும்.

பிறந்த குழந்தையை தாய்க்கு அருகிலேயே வைத்திருந்து, பிறந்து ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பாலூட்ட ஆரம்பித்துவிட வேண்டும்.

பிறந்தகுழந்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் தாயின் தொடு உணர்வுடன் இருப்பது அவசியம். தாயும் சேயும் ஒரே அரையில் அல்லது ஒரே படுக்கையில் சேர்ந்து இருப்பது சிறந்ததாகும். குழந்தைக்கு எத்தனை முறை வேண்டுமோ அத்தனை முறை தாய்ப்பால் தர வேண்டும்.

பிறந்த உடன் குழந்தைக்கு தாய்ப்பால் தருவதால், தாய்ப்பால் சுரப்பது தூண்டப்படுகிறது. இது தாயின் கர்பப்பை சுருங்குவதற்கும் உதவுகிறது. இதனால் அதிக உதிரப்போக்கு அல்லது மற்ற நோய்த்தாக்கம் ஏற்படுவது தவிர்கப்படுகிறது.

கொலஸ்ட்ரம் எனும், குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் கெட்டியான மஞ்சள் நிற பால், பிறந்த குழந்தைக்கு மிக சரியான உணவாகும். இது மிகவும் ஊட்டமானதுமட்டுமல்லாமல் குழந்தையை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. சில சமயம் குழந்தைக்கு கொலஸ்ட்ரம் தர வேண்டாமென தாய்மார்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது முற்றிலும் தவறான பரிந்துரையாகும்.

ஒரு தாய் மருத்துவமனையில் பிரசவித்த, 24 மணி- நேரமும் தானிருக்கும் அரையில், தனக்கு அருகில்தான் குழந்தை இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் உரிமை அந்த தாய்க்கு உண்டு. மேலும் தாய்ப்பாலூட்டி கொண்டிருந்தால் தன் குழந்தைக்கு மற்ற உணவோ அல்லது தண்ணீரோ தரக்கூடாது எனவும் எதிர்பார்க்கலாம்.

அடிக்கடி தாய்ப்பாலூட்டினால் பால் அதிகமாக சுரக்கும், இதனால் எல்லா தாய்மார்களும் வெற்றிகரமாக தாய்ப்பாலூட்ட முடியும்

பல புதிய தாய்மார்கலுக்கு தாய்பாலூட்டுவதற்கு ஊக்கம் தேவைப்படுகிரது. நல்லபடியாக தாய்ப்பால் ஊட்டிய இன்னொரு பெண்ணோ, குடும்பத்தினரோ, நண்பர்களோ அல்லது தாய்ப்பாலூட்டும் பெண்களின் குழுவை சேர்ந்த உறுப்பினரோ, தாய்க்குள்ள கஷ்டத்தையோ அல்லது சந்தேகங்களையோ போக்க உதவலாம்.

தாய் எவ்வாறு குழந்தையை பிடிக்கிறாள் என்பதும் குழந்தை எவ்வாறு மார்பை வாயினுள் கவ்வுகிறது என்பதும் மிக முக்கியம். குழந்தையை சரியான முறையில் பிடித்துகொண்டால் அதனால் நன்றாக மார்பை வாயினுள் கவ்வி உறிஞ்ச முடியும்.

குழந்தை சரியான முறையில் பிடித்துகொள்ளப்பட்டுள்ளதா என்பதற்கான அறிகுறிகள்:
· குழந்தையின் முழு உடம்பும் தாயின் பக்கம் திரும்பி இருக்கும்.
· குழந்தை தாயின் அருகில் இருக்கும்.
· குழந்தை ஓய்வாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.

குழந்தை சரியாக உறிஞ்சும் வகையில் பிடித்துகொள்ளாமல் இருந்தால் கீழ்கண்ட பிரச்சினைகள் ஏற்படலாம்:
· கடுகடுப்புள்ள மற்றும் வெடித்த மார்பு காம்புகள்
· பால் குறைவாக இருக்கும்
· குழந்தை பால் குடிக்க மறுக்கும்.

குழந்தை சரியாக பால் குடிக்கிறது என்பதற்கான அறிகுறிகள் :
· குழந்தையின் வாய் அகலமாக விரிந்திருக்கும்.
· குழந்தையின் முகவாய் தாயின் மார்பை தொட வேண்டும்.
· மார்புக்காம்பின் கரிய பகுதி குழந்தையின் வாயின் மேற்பகுதியில், கீழ்பகுதியைவிட அதிகமாக காணப்படுகிறது.
· குழந்தை நீண்ட ஆழமாக உறிஞ்சுகிறது.
· தாய்க்கு மார்புகாம்பில் வலி ஏற்படுவதில்லை.

பொதுவாக எல்லா தாய்மாரும் தேவையான அளவு பால் சுரக்க செய்யமுடியும், எப்போழுதெனில்
· அவள் தாய்பால் மட்டுமே குழந்தைக்கு தரவேண்டும்.
· குழந்தையை நன்றாக பிடித்திருக்க வேண்டும், அதன் வாயில் மார்பு நன்றாக பொருந்தி இருக்க வேண்டும்.
· குழந்தைக்கு எத்தனை தடவை வேண்டுமோ, எவ்வளவு நேரம் வேண்டுமோ, மற்றும் இரவிலும் கூட தாய்ப்பாலூட்ட வேண்டும்.
· பிறந்ததிலிருந்து குழந்தைக்கு எப்போழுது தேவையோ அப்பொழுதெல்லாம் தாய்ப்பால் தரவேண்டும். சிசு பால் குடித்து மூன்று மணி நேரமான பின்பும் தூங்கினால், மெதுவாக எழுப்பி தாய்ப்பால் தரவேண்டும்.

குழந்தை அழுவது அதற்கு மற்ற உணவோ அல்லது பானமோ தேவை என்பதற்கான அறிகுறி அல்ல. அதை இன்னும் தூக்கி கொள்ள வேண்டும் அல்லது கொஞ்ச வேண்டும் என்பதே சாதாரனமான அர்த்தம் ஆகும். சில குழந்தைகள் மகிழ்ச்சிக்காக மார்பை சப்பும். அதிகமாக சப்பினால் அதிகமாக பால் சுரக்கும்.
தனக்கு தாய்ப்பால் தேவையான அளவு இல்லை என்று பயப்படும் தாய்மார்கள் தன் குழந்தை பிறந்த முதல் சில மாதங்களிலேயே மற்ற உணவுகளோ அல்லது பானங்களையோ தந்துவிடுகிறார்கள். இதனால் குழந்தை குறைவாக சப்புகிறது, மேலும் தாய்ப்பாலும் குறைவாக சுரக்கிரது. தாய் குழந்தைக்கு மற்ற உணவோ அல்லது பானமோ தருவதை தவிர்த்து, தாய்ப்பால் மட்டுமே அதிகம் தந்தால், பாலும் அதிகமாக சுரக்கும்.

பால்புட்டிகளோ அல்லது சூப்பிகளோ, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தரக்கூடாது, ஏனேனில் அவைகளை சப்பும் விதம் மார்பை சப்பும் விதத்திலிருந்து வித்தியாசமானது. பால்புட்டிகள் அல்லது சூப்பிகளோ உபயோகித்தால், தாய்ப்பால் சுரப்பது குறைவதுடன் குழந்தை தாய்ப்பால் குடிப்பதை குறைத்தோ அல்லது நிறுத்தியோ விடும்.

சிறு குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டும் சரியாக கொடுத்தால் போதுமானது என்று தாய்மார்களுக்கு வலியுறுத்த வேண்டியது அவசியம். அவர்களுக்கு, குழந்தையின் தந்தை, குடும்பத்தார், பக்கதிலிருப்போர், நண்பர்கள், மருத்துவ அலுவலர்கள், பனிமேலாளர் மற்றும், பெண்கள் குழுக்களிலிருந்தும் ஊக்கமும் ஆதரவும் தேவைப்படுகிறது.

தாய்ப்பால் ஊட்டுவதால் தாய்க்கு ஓய்வு எடுத்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. தந்தையும், மற்ற குடும்பத்தினரும் தாயை தாய்ப்பாலூட்டும்போது அமைதியாக ஓய்வெடுக்கும்படி ஊக்கமளிக்கலாம். அவர்கள் தாய்க்கு போதுமான உணவும், வீட்டு வேலைகளில் தேவையான உதவி கிடைக்கும்படியும் உறுதி செய்யலாம்

தாய்ப்பால் குழந்தைளையும் சிறு பிள்ளைகளையும், ஆபத்தான வியாதிகளிலிருந்து பாதுகாக்கிறது. இது தாய் சேய் இடையே ஒரு சிறப்பான பினைப்பை ஏற்படுத்துகிறது.

தாய்ப்பால் தான் குழந்தையின் முதல் தடுப்புமருந்து. பேதி, காது மற்றும் நெஞ்சு வியாதிகளிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் தருவதாலும், தொடர்ந்து இரண்டு வயதுக்கும் மேலாக தருவதாலும் சிறந்த பாதுகாப்பு கிடைக்கிறது. மற்ற எந்த உணவோ அல்லது பானமோ இப்படிப்பட்ட பாதுகாப்பை தர முடியாது.

புட்டிப்பால் தானாகவே குடிக்கும் குழந்தைகளை விட தாய்ப்பலூட்டப்பட்ட குழந்தைகளுக்கு அதிக கவனமும், உற்சாகமூட்டமும் கிடைக்கிறது. அதிக கவனம், குழந்தைகள் வளரவும் மேம்படவும், மற்றும் பாதுகாப்பாக உணரவும் உதவுகிறது

புட்டிப்பால் புகட்டுவதால் நோயோ அல்லது மரணமோ ஏற்படலாம். ஒரு பெண்ணால் தாய்ப்பால் ஊட்ட முடியவில்லை என்றால், அந்த குழந்தைக்கு தாய்ப்பாலோ அல்லது தாய்ப்பாலிற்கு இணையான உணவோ சாதாரன சுத்தமான கிண்ணத்தில் தரவேன்டும்.

அசுத்தமான பால் புட்டிகளும், உறிஞ்சிகளும், பேதி மற்றும் காது நோய்களை ஏற்படுத்தலாம். பேதி குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தனது. ஒவ்வொரு உணவிற்கு முன்பும், கொதிக்கும் தண்ணீரில் பால் புட்டிகளையும், உறிஞ்சிளையும் ஸ்டெரிலைஸ் செய்வதால் நோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. ஆனாலும், புட்டிபால் குடிக்கும் குழந்தைகளுக்கு, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளைவிட பேதி மற்றும் பொதுவான தொற்று நோய்கள் ஏற்ப்படும் வாய்ப்பு மிக அதிகம்.

தாய்ப்பால் தரமுடியாத குழந்தைகளுக்கு அதன் தாயின் அல்லது மற்ற ஆரோக்கியமான தாயின் மார்பிலிருந்து பீச்சி எடுக்கப்பட்ட பாலே சிறந்த உணவாகும். அந்த தாய்ப்பால், சுத்தமான திறந்த கிண்ணத்திலிருந்து தரப்படவேண்டும். பிறந்த சிசுக்களுக்கும் திறந்த கிண்ணத்திலிருந்து பால் தரமுடியும். அதை சுத்தம் செய்வதும் எளிது.

சொந்த தாயின் பால் கிடைக்காத குழந்தைக்கு, வேறு ஆரோக்கியமான தாயின் தாய்ப்பாலே சிறந்த உணவு.

தாய்ப்பால் கிடைக்காத பட்சத்தில், தாய்ப்பாலுக்கு நிகரான தேவையான ஊட்டமுள்ள மாற்று உணவை குழந்தைக்கு கிண்ணத்தில் தரவேண்டும்.

தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தையை விட தாய்ப்பாலுக்கு பதில் மாற்று உணவு உண்ணும் குழந்தைகளுக்கு நோய் மற்றும் மரணத்தின் அபாயம் அதிகம்.

தாய்ப்பாலுக்கு மாற்று உணவுகளில், அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தண்ணீர் கலப்பதினால் குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடோ அல்லது நோய்களோ உண்டாகலாம். தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து, ஆறவைத்து, பின்பு கூறப்பட்டுள்ள விதிமுறைகளின் படி தாய்ப்பாலுக்கு மாற்று உணவை தயாரிக்க வேண்டும்.

மிருகங்களின் பால் மற்றும் சிசுக்களின் பால்பவுடர், சில மணி நேரம் அறையின் வெப்பத்தில் வைக்கப்பட்டால் கெட்டுவிடும். தாய்ப்பாலை அரைவெப்பத்தில் சுமார் 8 மணி நேரம் வரை வீணாகாமல் வைத்திருக்க முடியும். அதை சுத்தமான மூடிய பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

ஆறு மாதத்திற்கு பிறகு, குழந்தைளுக்கு வகை வகையான மற்ற உணவுகள் தேவைப்படும், ஆனால் தாய்ப்பால் தருவதை குழந்தையின் இரண்டாவது ஆண்டிற்கு பிறகும் தொடர வேண்டும்.

ஆறு மாதத்திற்கு பிறகு குழந்தைக்கு மற்ற உணவுகள் தேவைப்பட்டாலும், சத்து, புரதம் மற்றும் வைட்டமின் –ஏ, இரும்பு சத்து போன்றவைகளுக்கு தாய்ப்பாலே சிறந்த மூலப்பொருளாகும். குழந்தை தாய்ப்பால் குடிக்கும் வரை நோய்களிலிருந்து தாய்ப்பால் பாதுகாப்பளிக்கிறது. சிசு நிறைய தாய்ப்பால் குடிக்கவேண்டும் என்பதை ஊர்ஜிதப்படுத்த, 6 மாதத்திலிருந்து ஒரு வயது வரை மற்ற உணவுகளுக்கு முன்பாக தாய்ப்பால் தரவேண்டும். குழந்தையின் உணவில், வைட்டமீன் மற்றும் தாதுக்கள் கிடைக்க, தோல் நீக்கி, வேகவைத்து, மசிக்கப்பட்ட காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பழங்கள், எண்ணை, மேலும், மீன், முட்டை, கோழிஇறைச்சி, ஆட்டுஇறைச்சி, அல்லது பால் சார்ந்த பொருட்கள் இருக்க வேண்டும். இரண்டாவது வயதில், தாய்ப்பாலை உணவிற்கு பிறகும் மற்ற நேரங்களிலும் தரவேண்டும். ஒரு தாயும், அவளுடைய குழந்தையும் ஆசைப்படும் வரை தாய்ப்பால் கொடுக்கலாம்.

மற்ற உணவுகள் தருவதற்கான சாதாரன வழிமுறைகள் கீழ்கண்டவாறு :
6 மாதத்திலிருந்து 12 மாதம் வரை : தாய்ப்பால் அடிக்கடி தந்து, மற்ற உணவுகளை தினமும் 3 முதல் 5 முறை தரவேண்டும்.

12 முதல் 24 மாதங்கள் வரை : தாய்ப்பால் அடிக்கடி தந்து குடும்ப உணவுகள் 5 முறை தரவேண்டும்.

24 மாதங்கள் முதல் : தாயும் குழந்தையும் விரும்பினால் தொடர்ந்து தாய்ப்பால் தரலாம். குடும்ப உணவுகள் ஐந்து முறை தரவேண்டும்.

தவழும்போதும், நடக்கும்போதும், விளையாடும்போதும், தாய்ப்பாலை தவிர மற்ற உணவும் பானமும் சாப்பிடும்போதும், குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்படுகிரது. நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு அதிகமான தாய்ப்பால் தேவை. குழந்தைக்கு மற்ற உணவை செரிக்கும் தன்மை குறையும் போது,

தாய்ப்பால் தான் ஊட்டமுள்ள, எளிதில் செமிக்க கூடிய உணவு.

உற்சாகமிழந்த குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுதல் ஆறுதல் தரும்.

வீட்டிலிருந்து வெகு தூரத்தில் வேலை பார்க்கும் பெண்கள் குழந்தையுடன் இருக்கும் போது அடிக்கடி தாய்ப்பால் தருவதை தொடரலாம்.
வேலை நேரங்களில் குழந்தையுடன் தாய் இருக்க முடியவில்லை என்றால், அருகிலிருக்கும்போது அவள் அடிக்கடி தாய்ப்பால் தர வேண்டும். அடிக்கடி தாய்ப்பாலூட்டுதல், பால் சுரப்பதை தொடரச்செய்யும்.

வேலை பார்க்கும் இடத்தில் தாய்ப்பால் தரக்கூடிய வசதி இல்லை என்றால், அவள் வேலை நேரத்தில் 2 அல்லது 3 தடவை பாலை பீச்சி எடுத்து சுத்தமான பாத்திரத்தில் பத்திரப்படுத்தலாம். தாய்ப்பாலை அரையின் வெப்பத்தில், கெடாமல் 8 மணி நேரம் வரை வைத்திருக்கலாம். பீச்சிய பாலை சுத்தமான கிண்ணத்திலிருந்து குழந்தைக்கு தரலாம்.

தாய்ப்பாலுக்கு மாற்றாக பதில் உணவுகளை தாய் தரக்கூடாது.

குடும்பங்களும், சமூகமும், முதலாளிகளை ஊதியத்துடன் கூடிய பிரசவ விடுப்பு அளிக்க ஆர்வமூட்டலாம். குழந்தை காப்பகங்கள், மற்றும் பெண்களுக்கு தாய்ப்பால் தருவதற்கோ அல்லது பீச்சுவதற்கோ தகுந்த இடம் வழங்கும்படி ஊக்குவிக்கலாம்.

தாய்ப்பால் மட்டும் தருவதால், ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்து 6 மாதம் வரை 98% கருத்தடை பதுகாப்பு அளிக்க முடியும் – ஆனால் அந்த பெண்ணிற்கு மாதவிடாய் வருவது தொடங்கி இருக்க கூடாது, அவள் குழந்தை இரவும் பகலும் அடிக்கடி தாய்ப்பால் குடிக்க வேண்டும் அல்லது அந்த குழந்தைக்கு மற்ற உணவோ / பானமோ அல்லது ரப்பர் உறிஞ்சியோ தரக்கூடாது.

குழந்தை எவ்வளவு அதிகமான தடவை தாய்ப்பால் குடிக்கிறதோ, அந்த அளவிற்கு தாய்க்கு மாதவிடாய் தொடங்குவது தாமதிக்கப்படும். ஒரு தாய் 24 மணி நேரத்தில் ஏட்டு முறைக்கு குறைவாக தாய்ப்பாலூட்டினாலோ, அல்லது மற்ற உணவும் பானமும் தந்தாலோ அல்லது உறிஞ்சிகளை தந்தாலோ, குழந்தை குறைவாக தாய்ப்பால் குடிக்கும், அதனால் மாதவிடாய் விரைவில் தொடங்கிவிடும்.

மாதவிடாய் தொடங்கும் முன்பே ஒரு தாய் கர்ப்பம் அடையலாம். குழந்தை பிறந்து ஆறு மாதத்திற்கு பிறகு இதற்கான வாய்ப்புகள் குறைகின்றது.

அடுத்த கர்ப்பத்தை தாமத்திக்க நினைக்கும் பெண், கீழ்கண்டவற்றைப் பொறுத்து மாற்று கர்ப்பத்தடை யோசனைகளை கையாள வேண்டும். அவளுடைய மாதவிடாய் தொடங்கியிருந்தால்
· குழந்தை மற்ற உணவும் பானமும் சாப்பிடுவதாயிருந்தால், அல்லது உறிஞ்சிகளை பயன்படுத்தினால்.
· குழந்தைக்கு ஆறு மாதம் ஆகியிருந்தால்.

தாயின் இளைய குழந்தை இரண்டு வயதை தாண்டும் வரை அவள் மீண்டும் கர்ப்பமடையாமலிருப்பது, தாய் மற்றும் அவள் குழந்தைகளின்

ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இளம் பெற்றோர்களுக்கு, குடும்ப கட்டுப்பாடிற்கான ஆலோசனையை, சுகாதார அலுவலரோ அல்லது பயிற்சி பெற்ற மகப்பேறு உதவியாளரோ தரவேண்டும்.

கர்ப்பத்தை தள்ளிபோடும் எந்த வழிமுறையும் தாய்ப்பாலின் தன்மையில் பாதிப்பு ஏற்படுத்தாது. ஆனால் ஈஸ்ட்ரொஜேன் அடங்கிய சில கர்ப்பத்தடை மாத்திரைகள் தாய்ப்பாலின் அளவை குறைக்கலாம்.

பயிற்சி பெற்ற மகபேறு உதவியாளர், தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு உகந்த கர்ப்பதடை வழிகளை பரிந்துரைக்கலாம்.

நன்றி :ரசிஹன் 

1 comment: