Sunday, 27 March 2011
Saturday, 26 March 2011
செந்தலைக்கிளி
செந்தலைக்கிளி தீபகற்ப இந்தியாவில் காணப்படுகின்றன .ஓரிடத்தில் தங்கி வாழக்கூடிய இக்கிளி பசும்புல் வண்ண உடலையும் ,தெளிவான நீலங்கலந்த செந்நிறம் அல்லது ஆப்பிள் வண்ணத் தலையையும் கொண்ட ஈரமான இளயுதிர்க் காடுகள் , மரங்கள் அடந்த வளாகம் மற்றும் பயிர் நிலங்களில் வசிக்கின்றன .பொதுவாக 5 முதல் 10 கிளிகள் வரை சிறு கூட்டமாக காணப்படும் . அனைத்து வகைப்பலங்கள் மற்றும் தானியங்களை உணவாகக் கொள்கின்றன . டிசம்பரிலிருந்து ஏப்ரல் வரை இனப்பெருக்கம் செய்கின்றன .மரப் பொந்துகளில் கூடு அமைத்து 4 முதல் 5 முட்டைகளிடும் .பெண்கிளி முட்டையை அடைகாத்துக் குக்சுகளைப் பாதுகாக்கும் .
செந்தலைக்கிளி தீபகற்ப இந்தியாவில் காணப்படுகின்றன .ஓரிடத்தில் தங்கி வாழக்கூடிய இக்கிளி பசும்புல் வண்ண உடலையும் ,தெளிவான நீலங்கலந்த செந்நிறம் அல்லது ஆப்பிள் வண்ணத் தலையையும் கொண்ட ஈரமான இளயுதிர்க் காடுகள் ,
Monday, 21 March 2011
புள்ளிகளே அழகு
மிக அழகான இம்மானின்உடலில் மேலுள்ள பழுப்பு நிறத்தோலில் நிலவை பதித்தார் போன்று அழகான வெண்ணிறப்புள்ளிகள் காணப்படுவதால் இதற்கு புள்ளிமான் என்று பெயர் .காடுகளில் ,புள்ளிமான்களுடன் குரங்குகளும் அடிக்கடி சேர்ந்து காணப்படும் .வீணடித்து உண்ணும் இயல்புடைய குரங்குகள் உண்ணும் போது கீழே விழும் இரையை இவை உண்ணும் .வீணடித்து கீழே விழும் இலைகள்,பழங்கள் போன்றவைகளை புள்ளிமான்கள் எடுத்து உண்ணும் .மரங்களின் உச்சியில் குரங்குகள் இருக்கும் சமயம் புலி போன்ற இரை உண்ணிகளை கண்டால் ,ஒலியை எழுப்பி பிற விலங்குகளைத்தப்பித்து ஓட எச்சரிக்கை செய்யும்.புள்ளி மான்கள் தன்னுடைய அபரிமிதமான நுகரும் தன்மையால் இரைஉண்ணிகள் வருவதை அறிந்து பாதுகாப்பாகிவிடும் .
மேலும் சில வகை மான்கள்
Sunday, 20 March 2011
ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இராட்சத விலங்குகள்
உலகில் இதுவரை வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமாக டைனோசரஸ் கருதப்படுகின்றது.
அதனை நேரில் கண்டவர்கள் யாரும் இல்லை என்ற போதிலும் அதன் எச்சங்கள், சுவடுகள் மற்றும் கண்டெடுக்கப்பட்டுள்ள எழும்புக் கூடு என்பவற்றின் அடிப்படையில் மிகப்பெரியதாக அது கருதப்படுகின்றது. அதேபோல வேறு பல மிகப் பெரிய உருவத்திலான விலங்குகளும் இப்பூமியில் வாழ்ந்துள்ளதாக கருதப்படுகின்றது. அவை அழிந்துவிட்டபோதிலும் அவற்றின் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விலங்குகளின் சுவடுகள் பற்றிய தொகுப்பே இது.
அதனை நேரில் கண்டவர்கள் யாரும் இல்லை என்ற போதிலும் அதன் எச்சங்கள், சுவடுகள் மற்றும் கண்டெடுக்கப்பட்டுள்ள எழும்புக் கூடு என்பவற்றின் அடிப்படையில் மிகப்பெரியதாக அது கருதப்படுகின்றது. அதேபோல வேறு பல மிகப் பெரிய உருவத்திலான விலங்குகளும் இப்பூமியில் வாழ்ந்துள்ளதாக கருதப்படுகின்றது. அவை அழிந்துவிட்டபோதிலும் அவற்றின் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விலங்குகளின் சுவடுகள் பற்றிய தொகுப்பே இது.
1. கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பாம்பின் சுவடு .இப்பாம்பானது அனகொண்டாவைப் போன்ற உலகில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மிகப்பெரிய பாம்பாகும். இவை சுமார் 60 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளதுடன் சுமார் 42 அடி நீளமும், 1,135 கிலோ நிறையும் கொண்டவையாக இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2. எருமை உருவ கொறிணி (Rodent)
கொறிணி எனப்படுவது அணில் போன்ற விலங்கினமாகும். உருகுவே நாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு சுமார் 53 சென்ரி மீற்றர் உயரமுடைய 1000 கிலோ நிறையுடைய கொறிணியின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.இவை இற்றைக்கு சுமார் 2- 4 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
3. மடகஸ்காரில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய தவளை
உலகில் இதுவரை வாழ்ந்தவற்றில் மிகப்பெரியதாக கருதப்படும் பிரமாண்ட தவளை எச்சத்தினை ஆராய்ச்சியாளர்கள் மடகஸ்கார் நாட்டில் கண்டுபிடித்தனர். இது 41 சென்றி மீற்றர் உயரமும், 4.5 கிலோ கிராம் நிறையும் கொண்டிருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
4. பெரு நாட்டில் வாழ்ந்த பிரமாண்ட பென்குயின்கள்
தென் அமெரிக்காவில் சுமார் 35 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கூறப்படும் பிரமாண்ட பென்குயின்களே இவை. இவற்றின் சுவடுகள் பெருவின் அடகாமா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் உயரம் சுமார் 1.5 மீற்றர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
5. மனிதனை விட பெரிய கடல் தேள்
மனிதனைவிட பெரியதும் சுமார் 8.2 அடி உயரமானதும் சுமார் 390 மில்லியன் வருடங்கள் பழைமையானதுமான கடல் தேளின் எச்சங்கள் 2007 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இவை அக்காலப்பகுதியில் கடலில் வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
6. வரலாற்றுக்கு முற்பட்ட கங்காருகள்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 7-10 அடி வரையான உயரத்தினைக் கொண்ட இவ்வகைக் கங்காருகள் ஆதி கால மனிதர்களால் வேட்டையாடப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றி :ரசிகன்
Friday, 18 March 2011
உடல் அழகின் இரகசியத்தை கூறும் அனுஷ்கா
'இரண்டு 'படத்தில் மாதவனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் அனுஷ்கா .இப்போது ரஜினி ,கமல் என திரையுலகப் பிரபலங்களுக்கெல்லாம் ஜோடியாகப் பேசப்படும் அளவுக்கு எல்லோர் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்திருப்பவர் .தான் நடிகையான அனுபவம் பற்றி கூறும் அனுஷ்கா .தான் ஒரு யோகா ஆசிரியை என்பது பற்றியும் யோகா தந்த யோகமே இந்த சினிமா என்று குறிப்பிட்டதுடன் ,தனது உடல் அழகின் இரகசியத்தையும் வெளயுட்டுள்ளார் .நான் ஒரு யோகா ஆசிரியை நிறைய பேருக்கு கற்று கொடுக்க வேண்டும் என்றுதான் இதைப்படித்தேன் .நான் நடத்திய யோகா வகுப்பிற்கு வந்த தெலுங்கு இயக்குனர் என்னை நடிகையாக்கி விட்டார் .யோகா மூலம் கிடைத்த யோகம் தான் இந்த சினிமா வாழ்க்கை .நடிகை பூமிக்காவின் கணவராகிய பரத்தாகூர் தான் எனக்கு யோக கற்றுக்கொடுத்த குரு என்றும் குறிப்பிட்டுள்ள அனுஷ்கா ,நகைகள் மீது தனக்கு விருப்பம் இல்லை என்றும் சேலை நவநாகரிக ஆடைகள் என எந்த விதமான உடைகளை அணிந்தாலும் நகைகள் போட்டுக்கொள்ளமாட்டராம் .அத்துடன் நான் உயரமாக இருப்பதால்தான் நடிக்க வாய்ப்பு வந்தது .சில நேரங்களில் மட்டும் இன்னும் கொஜ்சம் குள்ளமாக இருந்திருக்கலாமோ என்று நான் நினைத்ததுண்டு .தினமும் இரவு 8 மணிக்கு முன்பு சாப்பிட்டு விடுவேன் .எனது உடம்பு இவ்வளவு சிலிம்மாக இருப்பதற்கு அதுதான் காரணம் என்றும் தனது உடலலகின் இரகசியத்தையும் வெளிஉட்டுள்ளார் அனுஷ்கா .
Thursday, 17 March 2011
பெண்கள் மனதில் பூட்டி வைத்துள்ள விஷயங்கள்
பெண்கள் மனதிற்குள் இதைத்தான் பூட்டி வைத்திருக்கிறார்கள்…ஒரு பெண் தனது மனதிற்குள் எதைத்தான் பூட்டி வைத்திருக்கிறாள்? என்று ஆய்வு செய்தார், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ என்பவர்.தனது ஆய்வின் முடிவில், பெண்கள் உண்மையிலேயே விரும்புபவை எவை? என்பதை ஒரு பட்டியலே வெளியிட்டார். அதில் இடம்பிடித்த முக்கிய விஷயங்கள் இங்கே உங்கள் பார்வைக்கும்…
- `கீ’ கொடுத்த பொம்மை மாதிரி எடுத்ததற்கெல்லாம் ஆட்டம் போடுபவளாக பெண்ணை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், அதிகம் பேசாதே… என்று கட்டுப்படுத்தவும் கூடாது.
- தான் விரும்புகிறவன், சிறந்த ஆண் மகனாக, எல்லோராலும் பாராட்டப்படக் கூடியவனாக இருக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களுமே பேராசைப்படுகிறார்கள். அதிலும், தனித்திறன் பெற்ற ஆண்களை பெண்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.
- காலையில் வேலைக்கு புறப்படும் ஆண், `அந்த பொருள் எங்கே? இது எங்கே?’ என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. அதேநேரம், பொறுப்பாக கேள்விகள் கேட்டால், அதற்குரிய செயலை பொறுப்பாக செய்ய எல்லா பெண்களும் தயாராகவே இருக்கிறார்களாம்.
- விடுமுறை நாட்களில் தங்கள் விருப்பம்போல் ஓய்வெடுக்க வேண்டும் என்பது பெண்களின் பேராசை என்றுகூட சொல்லலாம். அன்றையதினம், `இன்று ஏதாவது விசேஷமாக செய்யலாமே…’ என்று வற்புறுத்தக்கூடாது.
- எந்தவொரு வேலையையும் நின்று நிதானமாக செய்யத்தான் எல்லாப் பெண் களுக்கும் பிடிக்கும். அவசரம் அவசர மாக அதைச் செய்வதில் அவர் களுக்கு உடன்பாடு இல்லை.
- திடீரென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அதற்கு காரண மாக மனைவியை குற்றம் சொல்லக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக் குமே உண்டு.
- எந்தவொரு முடிவை கணவன் எடுத் தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறந் தள்ளக் கூடாது.
- ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.
- படுக்கையறையில் போர் அடிக்கும் விதமாக கணவன் செயல்படக்கூடாது. எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் புதுமையாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.
- அதிகம் பேசுவதில் பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், செல்போனில் அவர்கள் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. `அய்யோ… பில் அதிகமாகி விடும்’ என்று சொன்னால் அவர்கள் எரிச்சல் ஆகிவிடுவார்கள். அதனால், அவர்களை மனம்போல் பேச விட்டுவிட வேண்டும்.
- வீட்டிலேயே அடைந்து கிடக்க எந்தவொரு பெண்ணும் ஆர்வம் காட்ட மாட்டாள். வாரத்திற்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள பார்க், பீச், ஓட்டல், தியேட்டருக்கோ, வருடத்திற்கு ஒருமுறையாவது வெளிர் சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும்.
- கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது. அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள்.
- இப்போதெல்லாம் இடுப்பு சிறுத்த பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகிறார்கள். சிலநேரங்களில் எதிர்பாராதவிதமாக பெண்களது உடம்பு பெருத்துவிட்டால், அதற்காக அவர்களை இன்னும் வருத்தத்திற்குள்ளாக்கக் கூடாது. இடை குறைக்கும் முயற்சிக்கு கணவர் தரப்பில் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள்.
இப்படி பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றினாலே போதும். அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும் என்கிறார், ஆய்வாளர் பேகோ.
Subscribe to:
Posts (Atom)