தளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

palane

கிளிக் பண்ணுங்கோ

Sunday 20 February, 2011

புதிதாகப் பிறந்த குழந்தைகள் குளிப்பதற்கான நேரம்


சாதாரணமான முறையில், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பராமரிப்புக்கு வரும்போது, புதிய பெற்றோர் குளிப்பாட்டும் நேரத்தில்தான் அதிகம் பயப்படுகிறார்கள். முதல் இரு வாரங்களுக்கு, தொப்புள் கொடி நாண் விழுந்து மற்றும் தொப்புள் பகுதிப் புண் ஆறும்வரை, குழந்தையை ஓரு தொட்டியில் போடவேண்டாம். இந்த ஆரம்ப நாட்களில், ஒரு பஞ்சொற்றிக் குளியல் போதுமானது.


பஞ்சொற்றிக் குளியல்

ஒரு புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மாத்திரம் பஞ்சொற்றிக் குளியல் தேவைப்படும். உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் பஞ்சொற்றிக் குளியலுக்குத் தயாராகும்போது அறையை வெப்பமாக வைத்திருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், புதிதாகப் பிறந்த குழந்தைகள் வெற்றுடலில் குளிர்ந்த காற்றுப்படுவதை வெறுப்பார்கள். முன்கூட்டியே, ஒரு வெப்பமான ஷவர் ஒரு சில நிமிடங்களுக்கு ஓடச் செய்வதன்மூலம் உங்கள் குளியலறையை வெப்பமாக்கலாம். உங்களிடம் ஒரு மாற்று சிறு மெத்தை, ஒரு சிறிய பேசின்னில் வெதுவெதுப்பான நீர், ஒரு தண்ணீரில் நனைக்கப்பட்ட துடைக்கும்துணி, கொஞ்சம் பஞ்சுருண்டைகள், குழந்தைகளின் குளியல் சோப் கொஞ்சம், குழந்தைகளின் ஷம்பு, மற்றும் கையில் ஒரு மேலதிக துவாய் அல்லது சிறிய கம்பளித் துண்டு இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கைகளில் ஏதாவது மோதிரங்கள் அல்லது வேறு ஆபரணங்கள் இருந்தால் குளிப்பாட்டுவதற்கு முன்னர் அவற்றை அகற்றிவிடவும். ஏனென்றால் இவை உங்கள் குழந்தையைக் காயப்படுத்திவிடலாம்.
ஏதாவது தண்ணீர் கசிவதைப் பிடித்துக் கொள்ளுவதற்காக, ஒரு மாற்று மெத்தையை விரித்துவிடவும். சௌகரியமாக இருப்பதற்காக அதை ஒரு துவாயினால் மூடவும். உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் உடலின் ஒரு பாகத்தை கழுவத் தொடங்கும்போது, உடலின் மற்றப்பாகத்தை மற்றத் துவாய் அல்லது கம்பளியினால் மூடி மென்மையாகவும் அனலாகவும் வைத்துக்கொள்ளவும்.
உங்கள் குழந்தையின் ஒரு கண்ணை ஒரு புதிய, சற்று ஈரமாக்கப்பட்ட மென்மையான துணியினால் சுத்தம் செய்யவும். தொடர்ந்து உங்கள் குழந்தையின் முகத்தின் மற்றப் பாகங்களைத் துடைக்கவும். இதைச் செய்வதற்கு சோப் உபயோகிக்கத் தேவையில்லை.
குழந்தையின் உடலின் மற்றப் பாகங்களை மென்மையான சோப் போட்டுக் கழுவவும். உங்கள் குழந்தையின் உடலில்,அக்குள், மற்றும் காதின் பின்பகுதி போன்ற மடிப்புள்ள பகுதிகளைச் சுத்தம் செய்யவும். டயபர் பகுதியை கடைசியில் கழுவுவதற்கு நிச்சயமாயிருங்கள். உங்கள் குழந்தையின் காதுகளின் உட்பகுதி, போன்ற துவாரமுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்யத் தேவையில்லை. ஏனென்றால் இவை தம்மைத் தாமே சுத்தம் செய்துகொள்ளும். நீங்கள் சோப் போட்ட உடலின் எல்லாப் பகுதிகளையும் கழுவிவிடுவதில் நிச்சயமாகவிருங்கள்.
அதிக பட்சம், வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறைகள் உங்கள் குழந்தையின் தலைமுடிக்கு ஷம்பூ போடவும். இதைச் செய்வதற்கு, உங்கள் குழந்தையின் தலையை உங்கள் கையால் தாங்கிக்கொண்டு, தொட்டிலில் தாலாட்டுவதுபோல காற்பந்துப்பிடியில் வைத்துக் கொள்ளவும். தண்ணீர்த் தொட்டிக்குமேலாக அவனது தலையைப் பிடித்துக்கொண்டு, தலைக்கு மேலாக வெதுவெதுப்பான தண்ணீரை மென்மையாகத் தெளிப்பதற்கு உங்கள் கையை உபயோகிக்கவும். தண்ணீர்க் குழாயின் கீழே உங்கள் குழந்தையின் தலையை நேரடியாகப் பிடிக்கவேண்டாம். சிறிதளவு பேபி ஷம்பூவினால் நுரை உண்டாக்கி, நன்கு அலசிக் கழுவவும். உடனேயே துவாயால் உலர்த்திவிடவும்.
உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் பஞ்சொற்றிக் குளியல் முடிந்தவுடன், மென்மையாக ஒரு துவாயினால் சுற்றி கைகளினால் மெதுவாகத் தட்டி அவனை உலர வைக்கவும்.

குழந்தையின் குளியல் தொட்டி

உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் தொப்புள்கொடி நாண் விழுந்து அந்தப் பகுதி நிவாரணமடைந்த பின்னர் அவனை குளிப்பதற்காக குளியற் தொட்டியில் போட ஆரம்பிக்கலாம். உங்கள் குழந்தை ஓரு வளர்ந்தவரின் ஆதரவு இல்லாமல் சமநிலையில் இருக்கக் தொடங்கும்வரை, அவன் “பெரிய” குளியல் தொட்டி உபயோகிக்கத் தயாராயிருக்கமாட்டான்.
சில பெற்றோர்கள் ஒரு சிறிய பிளாஸ்ரிக் குளியல் தொட்டியை உபயோகிக்க விரும்புவார்கள்; மற்றவர்கள் தண்ணீர்த் தொட்டியை உபயோகிக்க விரும்புவார்கள். நீங்கள் ஒரு குழந்தைக் குளியல் தொட்டி வாங்குவதானால், அடியில் துவாரமுள்ள குளியல் தொட்டியை வாங்க முயற்சிக்கவும். அதனால், குளியல் முடிந்தவுடன் தண்ணீரை இலகுவாக வெளியே வடித்து விட முடியும். சமயலறைத் தண்ணீர்த் தொட்டியுடன் பொருந்தக்கூடிய குழந்தைக் குளியல் தொட்டிகளும் இருக்கின்றன.
உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டுவதற்குத் தயாராகும்போது, அறை போதியளவு வெப்பமுள்ளதாக இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கைகளிலிலிருக்கும் மோதிரம் அல்லது வேறு ஆபரணங்களை கழற்றிவிடவும். ஒரு கோப்பை, ஒரு குழந்தையைக் கழுவும் துணி, மென்மையான சோப், குழந்தைக்கான ஷம்பு, மற்றும் அருகில் ஒரு மென்மையான துவாய் என்பனவற்றை வைத்துக் கொள்ளவும். குளியல் தொட்டியை 5 முதல் 7 செமீ (2 முதல் 3 அங்குலங்கள்) வெதுவெதுப்பு நீரால் நிரப்புவதற்காக கோப்பையை உபயோகிக்கவும். உங்கள் மணிக்கட்டின் உட்பகுதியை உபயோகித்து தண்ணீரின் வெப்பநிலையைச் சோதித்துப் பார்க்கவும்.
உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் தலை மற்றும் கழுத்தை உங்கள் கையால் தாங்கிப் பிடிக்க நிச்சயப்படுத்திக்கொண்டு, அவனது தலையை மெதுவாகத் தண்ணீருக்குள் தாழ்த்தவும். உங்கள் குழந்தையின் முகத்தைத் துடைப்பதற்கு சோப்பில்லாமல் கழுவும் துணியை உபயோகிக்கவும். பின்பு அவனது உடலில் சோப் போட்டு அலசிவிடவும் உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையை சூடாக வைத்திருப்பதற்காகத் தொடர்ச்சியாக இளஞ்சூட்டு நீரை அவனது உடலில் ஊற்றினால் அவன் தனது குளியலை சந்தோஷமாக மகிழ்ந்தனுபவிப்பான்.
உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் தலைமுடியை மென்மையான ஷம்புவினால் கழுவவும். அவனது தலையின் மேற்பாகம் முழுவதும் ஷம்புவினால் மசாஜ் செய்யவும். ஷம்புவை உங்கள் கைகளால் அல்லது ஓரு கோப்பை நீரினால் அலசி விடவும்.
உங்கள் குழந்தையைக் குளிப்பாட்டி முடிந்ததும், ஒரு துவாயால் சுற்றி மெதுவாகத் தட்டி அவனை உலர விடவும். உங்கள் குழந்தையின் தோல் உலர்ந்து போகாமல் இருப்பதற்காகச் சில பேபி லோஷன்களை உபயோகிக்க நீங்கள் விரும்பலாம்.

பாதுகாப்புக்கான ஆலோசனைகள்

உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை குளியல் தொட்டிக்குள் இருக்கும்போது அவனைத் தாங்கிப் பிடித்துக்கொள்வதற்கு எப்போதும் நிச்சயமாயிருங்கள். குளிப்பாட்டும்போது அவனைத் தனியே விட்டுவிடவேண்டாம். அல்லது வேறொரு பிள்ளையின் மேற்பார்வையில் விட்டுவிடவேண்டாம். உங்கள்புதிதாகப் பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டும்படி குழந்தைப் பராமரிப்பாளரைக் கேட்டுக்கொள்ள முயற்சிக்கவேண்டாம். குளியல் வளையங்கள் மற்றும் குளியல் இருக்கைகள் சிபாரிசு செய்யப்படவில்லை.
கடைசி ஆனால் முடிவானதல்ல, சுடு நீர்க் குளியல், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் மென்மையான தோலைச் சுட்டுவிடும் என்பதை எப்போதும் நினைவில் வைக்கவும். உங்கள் குழந்தையைக் குளியல் தொட்டியில் வைப்பதற்கு முன்பாக தண்ணீர் சூடானதாக அல்ல வெதுவெதுப்பானதாக இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment