பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுதான் முதுகெலும்பு உயிரினங்கள். இந்தஉயிரினங்களுக்கு எலும்புகள் தான் உடலமைப்பை கொடுக்கின்றன. அவற்றின் தகவமைப்புக்கு ஏற்ப எலும்புகள் அமைந்துள்ளன. ஊர்வன பறப்பன, பாலூட்டிகளில் மனிதனும் அடக்கம். மனிதஎலும்புகள் விசித்திரமான அமைப்பு கொண்டவை. அவைதான் மனிதனை நிமிர்ந்து நடக்கச் செய்கின்றன. மனிதனின் செயல்பாட்டிற்கும் ஆதாரமாக உள்ளன. இந்த மனித எலும்புகளின் தன்மைகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். எலும்பு என்பது மனிதனின் உடலுக்குள் காணப்படும் விறைப்பான, கடினத்தன்மை கொண்ட உறுப்பாகும். உடல் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக அமைந்து உடலைத் தாங்கும் உறுப்புகள்தான் எலும்புகள். மனிதனின் உடலமைப்பை நிர்ணயம் செய்வது எலும்புகள் தான். ஒரு இடம் விட்டு ஒரு இடத்திற்கு நகர வைப்பதும் எலும்புகள்தான். இவைகள் பாதிக்கப் பட்டால் மனிதன் அலங்கோலமான ஜந்துவாக மாறிவிடுவான். எலும்புகள் உடல் உறுப்புகளை பாதுகாப்பதுடன் இரத்த சிவப் பணுக்கள், வெள்ளையணுக்கள் இவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகவும் உள்ளன. மேலும் கனிமங்களை சேகரித்து வைக்கும் சேமிப்பு கூடமாகவும் எலும்புகள் உள்ளன.
பொதுவாக எலும்புகள் பலவகையான வடிவங்களில் அமைந்துள்ளன. இவற்றில் சில சிறியனவாகவும், பெரியனவாகவும் காணப்படும். அதுபோல் மிகவும் உறுதியான எலும்புகளும் உறுதி குறைந்த எலும்புகளும் உள்ளன. இவை மனிதனின் அனைத்து உறுப்புகளையும் பாதுகாப்பதற்கு தகுந்தவாறு உள்ளன.
எலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒருவகை கனிமங்கள் நிறைந்துள்ளன. இவை தேன் கூட்டு அமைப்பை ஒத்துக் காணப்படும். முப்பரிமாண உள்ளமைப்புகளைக் கொண்டு எலும்புகளுக்கு விரைப்புத் தன்மையை கொடுப்பது எலும்புத் திசுக்கள்தான். மேலும் எலும்புகளில் எலும்பு மஜ்ஜை, எண்புழை, நரம்பு, இரத்த அணுக்கள், குருத்தெலும்பு போன்றவை அடங்கும்.
உடலுக்கு ஆதாரமாக இருப்பதுடன் தசை நரம்புகளுக்கு பற்றுக் கோளாகவும் இருப்பது எலும்புத் கூடுதான்.மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்றவாறு எலும்புகள்
அமைந்துள்ளன. இந்த எலும்புகளில் 50 சதவீதம் நீரும், 33 சதவீதம் உப்புக்களும் 17 சதவீதம் மற்ற பொருட்களும் அமைந்துள்ளன.எலும்பில் கால்சியம், பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக் கூடிய தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன. நமது உடல் நலத்திற்குத் தேவையான கால்சியம் சத்துக்கள் அனைத்தும் எலும்புகளில் தான் சேமித்து வைக்கப்படுகின்றன. இந்த கால்சியம் சத்துக் குறைந்தால் எலும்புகள் பலமிழந்து எளிதில் உடைந்துவிடும்.
எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தியிருந்தால் தான் சீரான முறையில் அவைகள் செயல்படமுடியும். அவ்வாறு பொருந்தும் இடங்களுக்கு மூட்டுகள் என்று பெயர். அசையும் மூட்டு, அசையா மூட்டு என இரு வகை மூட்டுகள் உள்ளன. தலையிலும், இடுப்பிலும் காணப்படும் எலும்புகள் அசையா மூட்டுகள் ஆகும். அசையும் மூட்டுகள் நான்கு வகைப்படும்.
பந்துக்கிண்ண மூட்டு
கீழ் மூட்டு
வழுக்கு மூட்டு
செக்கு மூட்டு
கீழ் மூட்டு
வழுக்கு மூட்டு
செக்கு மூட்டு
இந்த நால்வகை அசையும் முட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ, தேய்மானமோ ஏற்படாமல் இருப்பதற்கு எலும்புகளின் முனையில் குருத்தெலும்புகள் மூடப்பட்டு அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் அமைந்து அதில் ஒரு வழுவழுப்பான திரவம் சுரந்து மூட்டுகளின் செயல்பாடுகளை எளிதாக்குகிறது. மேலும் மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவாமல் இருக்க தசை நார்களால் பின்னப்பட்டுள்ளன.
எலும்புகளில் சின்ன எலும்பு காதில் உள்ள ஏந்தி(ண்tச்ணீஞுண்) என்ற எலும்பாகும். மிகப் பெரிய எலும்பு தொடை எலும்பாகும். மனிதனின் மார்புக் கூட்டில் மார்பெலும்புடன் விலா எலும்புகள் 24 உள்ளன. இவை 12 ஜோடியாக ஒரு கூடுபோல் காட்சியளிக்கும். இவைகள் இதயம், நுரையீரல், போன்றவற்றை பாதுகாக்கிறது.
சாதாரணமாக பிறந்த குழந்தைக்கு 306 எலும்புகள் காணப்படும். பின் குழந்தை வளரும்போது படிப்படியாக பல எலும்புகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிய வலுவான எலும்பாக மாறும். நன்கு வளர்ச்சியடைந்தமனிதனுக்கு 206 எலும்புகள் இருக்கும்.
தலைப்பகுதியில் அதாவது மண்டையோட்டில் 8 எலும்புகள் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து கடினமாக உள்ளன.
மண்டையறை எலும்புகள் – 8
முக எலும்பு – 14
காது எலும்புகள் – 6
(மேலஸ், இன்கஸ், ஸ்டேப்பிஸ்)
தொண்டை எலும்பு – 1
தோள்பட்டை எலும்பு – 4
(காறை எலும்பு – 2, தோள் எலும்பு – 2)
மார்புக் கூட்டில் – 25
(மார்பெலும்பு – 1, விலா எலும்பு – 24)
முதுகெலும்புத் தூண் – 24
மேற்கைகளில் – 6
கைகளில் – 54
இடுப்புக்கூடு – 4
கால்களில் – 8
கால்களின் கீழ் பகுதியில் – 52
முக எலும்பு – 14
காது எலும்புகள் – 6
(மேலஸ், இன்கஸ், ஸ்டேப்பிஸ்)
தொண்டை எலும்பு – 1
தோள்பட்டை எலும்பு – 4
(காறை எலும்பு – 2, தோள் எலும்பு – 2)
மார்புக் கூட்டில் – 25
(மார்பெலும்பு – 1, விலா எலும்பு – 24)
முதுகெலும்புத் தூண் – 24
மேற்கைகளில் – 6
கைகளில் – 54
இடுப்புக்கூடு – 4
கால்களில் – 8
கால்களின் கீழ் பகுதியில் – 52
மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளின் அளவுகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். எலும்புகளைச் சுற்றி நரம்புகள், தசை, தமணி, தசை நார்கள் போன்றவை பின்னிப் பிணைந்துள்ளன.
இந்த எலும்புகளின் சேமிப்புகளிலிருந்துதான் உடல் தேவையான கால்சியம், பாஸ்பேட் சத்துக்களை எடுத்துக்கொள்கிறது.
இதனால் முதுமையில் எலும்புகள் போதிய பலமின்றி காணப்படுகின்றன. இந்த எலும்புகள் நன்கு திடமாக இருக்க வைட்டமின் டி அதிகம் தேவை. வைட்டமின் டி குறைபாடு உண்டானால் எலும்பு மெலிவு நோய் உண்டாகும். இதனால் எலும்புகள் கால்சியம் சத்தை சேமித்து வைக்க இயலாமல் போய்விடும். இந்த எலும்பு மெலிவு நோய்க்கான
அறிகுறிகள் எளிதில் கண்டறிய முடியாது. ஆனால் இவை வராமல் தடுக்க பல வழிமுறைகள் உள்ளன.சிறு குழந்தைகளுக்கு சூரிய வெளிச்சம் படுவது நல்லது. இந்த சூரிய ஒளியில்தான் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி அதிகம் கிடைக்கும். இதுதான் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், வலுவுக்கும் முக்கியமானது.
மேலும் எலும்புகள் பலப்பட கால்சியம் சத்து அதிகம் தேவை. இதனால் அதிக அளவு கால்சியம் சத்து நிறைந்த தண்டுக்கீரை, காரட், ஆரஞ்சு, பாதாம் பருப்பு, முட்டைக்கோஸ், தவிடு நீக்காத கோதுமை போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதுபோல் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணெய், முளை கட்டிய கொண்டைக்கடலை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றி: விதை
0 comments:
Post a Comment