தளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

palane

கிளிக் பண்ணுங்கோ

Tuesday, 15 February 2011

கண்தானம் செய்த நடிகை

புன்னகை அரசி என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் நடிகை சினேகா தனது கண்களை இன்று தானம் செய்தார். இதற்கான படிவத்தின் கையெழுத்திட்டு ராஜன் ஐ கேர் மருத்துவமனைக்கு அவர் வழங்கினார். பல்வேறு சமூக பணிகளில் ஆர்வம் காட்டி வரும் சினேகா சமீபத்தில் கூட போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் ரோட்டரி கிளப் முயற்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் தன்னை அந்த அமைப்பில் இணைத்துக் கொண்டு நிதியுதவியும் செய்தார்.

இப்போது தனது கண்களை தானம் செய்துள்ளார் சினேகா. இதற்கான நிகழ்ச்சி இன்று காலை சென்னை ராஜன் ஐ கேர் மருத்துவமனையில் நடந்தது. கண்தான பத்திரத்தில் கையெழுத்திட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கிய சினேகா, “கண்தானம் செய்வதன் மூலம், வாழ்க்கையை தொடர்ந்து வாழும் வாய்ப்பு கிடைக்கிறது” என்றார்.

0 comments:

Post a Comment