தளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

palane

கிளிக் பண்ணுங்கோ

Wednesday, 23 February 2011

மண்டை ஓட்டில் தண்ணீர் குடித்த ஆங்கிலேயர்கள்


தற்போது தென் மேற்கு இங்கிலாந்தில் இருக்கும் மக்களின் முன்னோர்கள் மனித மண்டை ஓடுகளை தண்ணீர் குடிக்கும் டம்ளர்களாகவும், அதை வைத்துக்கொள்ளும்பாத்திரமாகவும் பயன்படுத்தியுள்ளார்கள்.இங்கிலாந்தின் சோமர்செட் பகுதியில் கிடைத்துள்ள ஏராளமான மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்தே இத்தகைய முடிவுக்கு வந்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆய்வுக்குழுவைச் சேர்ந்த சில்வியா பெல்லோ என்பவர் கூறுகையில், இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த மண்டை ஓடுகளை சுத்தம் செய்து தண்ணீர் குடிப்பதற்காக பயன்படுத்தியுள்ளார்கள். இவ்வாறு பயன்படுத்தப்பட்ட ஐந்து மண்டை ஓடுகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதில் மூன்று வயது குழந்தையின் மண்டை ஓடும் அடங்கும்.மண்டை ஓட்டின் மேற்பகுதியை பெரும்பாலும் நீரை சேமித்து வைத்துக் கொள்ள மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். இத்தகைய மண்டை ஓடுகள் 14 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. கல் ஆயுதங்களைக் கொண்டு இந்த மண்டை ஓடுகளை சரி செய்துள்ளார்கள். மனித பாகங்களை எவ்வளவு நுணுக்கமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான் மிகவும் ஆச்சரியத்திற்குரிய விஷயமாகும் என்கிறார் பெல்லோ.கல்ஆயுதங்களை மிகவும் திறமையுடன் பயன்படுத்தி மண்டை ஓடுகளை செதுக்கியிருக்கிறார்கள் இந்தப்பகுதி மக்களின் முன்னோர்கள். இறந்தபிறகு நடத்தப்படும் இறுதிச்சடங்குகள் மிகவும் சிக்கலானதாக இருந்திருக்க வேண்டும் என்கிறார் மற்றொரு ஆய்வாளரான கிரிஸ் ஸ்டிரிஞ்சர். சடங்குகளின்போதுதான் மண்டை ஓடுகளை தங்கள் பயன்பாட்டுக்காக மக்கள் எடுத்திருக்க வேண்டும் என்பது அவருடைய கருத்து. இத்தகைய மண்டை ஓடுகளில் ஒன்றை லண்டனில் உள்ள இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் மூன்று மாத காலத்திற்கு வைக்கப் போகிறார்கள்.


தீக்கதீர் 

0 comments:

Post a Comment