தளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

palane

கிளிக் பண்ணுங்கோ

Monday, 28 February 2011

நன்றி உள்ள பிராணி

நாம் பல பேருடன் நட்பு கொண்டிருப்பது மனித இயல்பு ஆனால் விலங்குகளுடன் நட்பு கொண்டிருப்பது ஒரு சிலரே .விலங்குகள் பலவகைகல் உள்ளன .அவற்றில்  நன்றியுடன் இருப்பது நாய் மட்டுமே.நன்றி உள்ள பிராணி என்றும் அழைப்பர் .நட்புனா இது அல்லவா நட்பு . 





மனிதர்கள் ஒருவருக்குருவர் உதவி செய்து வாழவேண்டும் என்பது நாம் அனைவரின் விருப்பம் .இங்கே பாருங்கள் ஒரு நாய் தன் எசமானிக்கு எண்ணமாய் உதவிசெய்கிறது பாருங்கள் .  

Wednesday, 23 February 2011

ஆழியாறு ஆணை

தமிழ் நாட்டில் அணைகள் பல உள்ளன .அவற்றில் இன்று ஆழியாறு ஆணை பற்றி பார்ப்போம்.

ஆழியாறு அணை 1962ஆம் ஆண்டு ஆழியாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ,கோயம்புத்தூரிலிருந்து 65 கிலோமீட்டர் பொள்ளச்சிளிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் ஆழியாறு ஆணை அமைந்துள்ளது .ஆழியாறு அணை அருகே பூங்கா, மீன் காட்சியகம் ,மங்கிபால்ஸ், தீம்பார்க் போன்றவை அமைந்துள்ளன. அம்பரம்பாளையம் தர்கா ஆழியாற்றின் கரையில் அமைந்துள்ளது.தமிழ்நாடு மின்வளர்ச்சி துறையினரால் பராமரிக்கப்படும் இந்தியாவின் இரண்டாவது பெரிய வண்ணமீன் காட்சியகம் உள்ளது. அணையில் படகு சவாரி உள்ளது .  

அணையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மங்கிபால்ஸ் உள்ளது மங்கிபால்ஸ் 20 மீட்டர் உயரமுள்ளது மூலிகைகள் கலந்து வரும் நீரில் குளித்தால் புத்துணர்ச்சியாக இருக்கும் .   மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் ஆழியாறு அணை முதல் முறையாக 2010ம் ஆண்டு ஆணை  நிரம்பியது. அதிகாரிகளின் முயற்சியால் அணையில் இருந்து தண்ணீர் வீணாவது தவிர்க்கப்பட்டது.  ஆழியாறு ஆணை பார்பதர்க்கு மிக அருமையாக இருக்கும். 
                                
சுற்றுல சென்று பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும் .

மண்டை ஓட்டில் தண்ணீர் குடித்த ஆங்கிலேயர்கள்


தற்போது தென் மேற்கு இங்கிலாந்தில் இருக்கும் மக்களின் முன்னோர்கள் மனித மண்டை ஓடுகளை தண்ணீர் குடிக்கும் டம்ளர்களாகவும், அதை வைத்துக்கொள்ளும்பாத்திரமாகவும் பயன்படுத்தியுள்ளார்கள்.இங்கிலாந்தின் சோமர்செட் பகுதியில் கிடைத்துள்ள ஏராளமான மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்தே இத்தகைய முடிவுக்கு வந்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆய்வுக்குழுவைச் சேர்ந்த சில்வியா பெல்லோ என்பவர் கூறுகையில், இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த மண்டை ஓடுகளை சுத்தம் செய்து தண்ணீர் குடிப்பதற்காக பயன்படுத்தியுள்ளார்கள். இவ்வாறு பயன்படுத்தப்பட்ட ஐந்து மண்டை ஓடுகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதில் மூன்று வயது குழந்தையின் மண்டை ஓடும் அடங்கும்.மண்டை ஓட்டின் மேற்பகுதியை பெரும்பாலும் நீரை சேமித்து வைத்துக் கொள்ள மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். இத்தகைய மண்டை ஓடுகள் 14 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. கல் ஆயுதங்களைக் கொண்டு இந்த மண்டை ஓடுகளை சரி செய்துள்ளார்கள். மனித பாகங்களை எவ்வளவு நுணுக்கமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான் மிகவும் ஆச்சரியத்திற்குரிய விஷயமாகும் என்கிறார் பெல்லோ.கல்ஆயுதங்களை மிகவும் திறமையுடன் பயன்படுத்தி மண்டை ஓடுகளை செதுக்கியிருக்கிறார்கள் இந்தப்பகுதி மக்களின் முன்னோர்கள். இறந்தபிறகு நடத்தப்படும் இறுதிச்சடங்குகள் மிகவும் சிக்கலானதாக இருந்திருக்க வேண்டும் என்கிறார் மற்றொரு ஆய்வாளரான கிரிஸ் ஸ்டிரிஞ்சர். சடங்குகளின்போதுதான் மண்டை ஓடுகளை தங்கள் பயன்பாட்டுக்காக மக்கள் எடுத்திருக்க வேண்டும் என்பது அவருடைய கருத்து. இத்தகைய மண்டை ஓடுகளில் ஒன்றை லண்டனில் உள்ள இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் மூன்று மாத காலத்திற்கு வைக்கப் போகிறார்கள்.


தீக்கதீர் 

Tuesday, 22 February 2011

முகப் பொலிவிற்கு


எப்படி இருந்த நான் இப்படி ஆயிடேன் என்று நினைத்து வருத்தபடுவதை விட்டு விட்டு கீலவரும் வழிகளை பின்பற்றினால் ஆரோக்கியமான வாழ்கை வாழமுடியும் .சிலரது கன்னங்கள் குழிவிழுந்து முகம் பொலிவற்று காணப்படும். கன்னங்கள் குழிவிழுவதால் கண்களும் இருண்டு, பொலிவின்றி இருக்கும். இதனால் முகத்தை எவ்வளவு அழகுப்படுத்தினாலும் வயது முதிர்ந்தவர்போல் தோற்றம் தரும்.

ஒருவருடைய முகத்தை வைத்து அவரின் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
இதைத்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றார்கள். தலைசிறந்த மருத்துவர்கள் பலர் முகத்தை வைத்தே என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்துகொள்வார்கள்.
பொதுவாக கன்னங்கள் குழிவிழுவதற்கு காரணம், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தின்மையும் ஒரு காரணம். மது, புகை, போதை போன்ற தீய பழக்கவழக்கங்கள் உள்ளவர்களுக்கு கன்னங்கள் எளிதில் குழிவிழுந்துவிடும். இந்தக் கன்னக் குழிகளை மாற்றி முகத்தை பொலிவாக்க தினமும் காலையில் எழுந்து பல்துலக்கிவிட்டு 1/2 லிட்டர் அளவு தண்ணீர் அருந்த வேண்டும். பின் சிறிது தூரம் நடைப்பயிற்சி, யோகா, சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
முளைகட்டிய பச்சை பயறு 1 கப் அளவு எடுத்து அதனுடன் சின்னவெங்காயம் சேர்த்து காலையில் சாப்பிட்டுவரவேண்டும். அரை மணி நேரத்திற்குப் பிறகே காலை உணவு உண்ண வேண்டும். இப்படி செய்து வந்தால் கன்னக் குழிகள் மாறி முகம் மொழுமொழுவென்று இருக்கும்.
பாதாம் பருப்பை அரைத்து பொடிசெய்து வைத்துக்கொண்டு தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு டம்ளர் பாலில் 1 ஸ்பூன் அளவு பாதாம் பொடியும், 1 ஸ்பூன் அளவு தேனும் கலந்து தினமும் குடித்து வந்தால் உடல் பலப்படும். அழகும் கூடும்.
தினமும் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும். இரத்தசோகை குணமானால் உடல் ஆரோக்கியம் பெறும்.
புதினாவுடன் தேங்காய் கலந்து சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உண்ட உணவும் எளிதில் ஜீரணமாகும். நன்கு பசி தூண்டும். முகப் பொலிவும் உண்டாகும்.



உலர்ந்த திராட்சைப் பழமோ அல்லது பேரீச்சம் பழமோ பாலில் ஊறவைத்து, அதனுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து இரவு உணவுக்குப்பின் படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல் நலம் பெறும். முகம் வசீகரமாக இருக்கும்.
பப்பாளிப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, சப்போட்டா பழங்கள் சாப்பிட்டு வந்தால் கன்னக்குழிகள் உண்டாகாது.
தினமும் ஏதாவது ஒரு கீரை, பசுநெய் சேர்த்துக்கொள்வது நல்லது.
உடலுக்குத் தேவையான ஓய்வு தேவை. அதிக ஓய்வும் உடலைக் கெடுக்கும்.
மேலும் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால் முகம் எப்போதும் பொலிவாக இருக்கும். ஆனந்தம் அழகைக் கூட்டும்.
என்று மருத்துவர்கள் கூறுவார்கள். இதை பின்பற்றினால் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும் இருப்பினும் தினமும் இவ்வாறு செய்வது என்பது முடியாத காரியம் என்றாலும் வாரம் ஒரு முறையாவது இவற்றை பின்பற்றினால் நல்லது .தினமும் உடற்பயிச்சி செய்து வந்தால் ஆரோக்கியமாக வாழலாம் .

Monday, 21 February 2011

நகைச்சுவை

நகைச்சுவை என்பது ஒவ்வொரு மனிதனும் அன்றாட வாழ்வில் உணரும் விடையம் தான் "வாய் விட்டு சிரித்தா நோய் விட்டு போகும் என்பர்கள்" அவட்றில் ஒரு சில காச்சிகளை இங்கு காண்போம் .

சர்தார் 1 : என்ன மச்சான், நல்லா இருக்கியா ரொம்ப நாளா போனையே காணோம்

சர்தார் 2 : மாப்ள சத்தியமா நான் எடுக்கலடா நல்லா தேடிப் பாருடா









நகைச்சுவை என்பது ஒவ்வொரு மனிதனும் அன்றாட வாழ்வில் உணரும் விடையம் தான் "வாய் விட்டு சிரித்தா நோய் விட்டு போகும் என்பர்கள்" .அவட்றில் ஓரிரு காமடிகளை பார்போம்


சர்தார் 1 : என்ன மச்சான், நல்லா இருக்கியா ரொம்ப நாளா போனையே காணோம்

சர்தார் 2 : மாப்ள சத்தியமா நான் எடுக்கலடா நல்லா தேடிப் பாருடா............




Sunday, 20 February 2011

முடி வளர மற்றும் முடி கொட்டுவதை தடுக்கும் வழிகள்



முடி கொட்டுபவர்களுக்கு என்னதான் முடிக்கு பராமரிப்பு செய்தாலும் உள்ளே உட்கொள்ளும் சத்தான முக்கியமாக இரும்பு சத்துள்ள உணவுகள் மூலமாகவே நல்ல பலன்கள் கிடைக்கும்.
பெண்கள் முக்கியமாக வெளிநாட்டில் வசிக்கும் மற்றும் புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கும் முடி கொட்டுவது என்பது பொதுவான பிரச்சனை.எல்லோருக்கும் வெளிநாட்டில் முடி கொட்டுகிறது என்பார்கள்.
நான் படிக்கும் போதும் என் பிரண்ட்ஸ் புலம்புவார்கள்.சிலருக்கு முக்கியமாக பாராஷூட் ஒத்துக்கொள்ளாது.ஆனாலும் அதைப்பற்றி தெரியாமல் நான் சுத்தமான எண்ணெய்தான் உபயோகிக்கிறேன் ஆனாலும் கொட்டுகிறது என்பார்கள்.
முக்கியமான ஒன்று,அதிக வாசனை உள்ள எதுவும் சருமத்துக்கோ, தலைக்கோ நல்லதல்ல.VVD தேங்காய் எண்ணெய் உபயோகப்படுத்தினால் முடிக்கு மிகவும் ஏற்றது.மேலும் இதனால் முடிக்கு ஒவ்வாமை ஏற்படாது.இதைவிட சிறந்தது வீட்டில் தயாரிக்கும் தேங்காய் எண்ணேய்.அதற்காக வீட்டில் தென்னை மரம் வளர்க்க முடியுமா என்று கேட்காதீர்கள்.நாம் கடையில் வாங்கும் ஒரு தேங்காயை கொண்டே வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம்.செய்முறையை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.எண்ணெய் தேய்ப்பதற்கு முக்கிய காரணம் எண்ணெய்யை தேய்க்கும் போது தலையில் அழுத்தி தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.முடி வளர அதுவும் அவசியம்.எண்ணெய்யை வெளியில் தேய்த்தாலும் அது வேர்க்கால்களில் ஊடுருவி உள்ளே செல்லும்.அதனால் தான் சில எண்ணெய்களை,கிரீம்களை முடியில் தேய்க்கும் போது முடி கொட்டி விடுகிறது.
என்னதான் முடி வளர பரம்பரை ஒரு காரணம் என்றாலும் நாம் முயன்றால் கொஞ்சம் வளர்ச்சியை கொண்டு வரலாம் அல்லது இருப்பதையாவது காப்பாத்தலாம்.இரும்பு சத்துள்ள உணவு சாப்பிடுவது மிக அவசியம்.ஒரு நாளைக்கு ஒரு கட்டு கீரையை தனியாக நீங்கள் மட்டும் சாப்பிடுங்கள்.இதனால் சாதம் எடுத்து கொள்ளும் அளவும் குறையும்.உடம்பும் குறையும் எந்த கஷ்டமும் இல்லாமல். மலேஷியாவில் கீரையை மிக எளிதாக சமைப்பார்கள்.கீரை இல்லாமல் அவர்கள் உணவு இல்லை.ஒரு ஸ்பூன் எண்ணெய்யில் 3 பல் பூண்டுகளை அரிந்து போட்டு வதக்கி,கீரையை போட்டு வதக்கி 1 சிட்டிகை உப்பு போட்டு ஒரு தட்டு வைத்து மூடி 3 நிமிடம் கழித்து இறக்கவும்.So Simple.
இதைவிட அனைவருக்கும் உகந்த மருந்து பேரிட்சை பழம்.குழந்தை பிறந்தவுடன் சிலருக்கு மிகவும் அதிகமாக முடி கொட்டும்.அல்லது புது ஊரில் குடியேறும் நிறைய பேருக்கு இந்த பிரச்சனை உண்டு.தினமும் 10 பேரிட்சை பழத்தை சாப்பிடுங்கள்.முடி கொட்டுவது நிற்கும் வரை சாப்பிடுங்கள்.அப்படியே சாப்பிட பிடிக்காட்டி பாலில் நன்றாக ஊற வைத்து மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் போல சாப்பிடுங்கள்.எனக்கு தெரிந்த வரையில் இது நிச்சயம் பலன் தரும்.இதில் முக்கியமான ஒன்று எந்த இரும்பு சத்துள்ள உணவை அதிகம் சாப்பிட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும்.எனவே மற்ற உணவுகளை அதற்கு தகுந்தாற்போல் சாப்பிடுங்கள்.வாழைப்பழம்,தயிர்,கொய்யாப்பழம் முதலியவற்றை உடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆண்களுக்கு முக்கியமான ஒன்று,என்னதான் முடி கொட்டுவதற்கு பரம்பரை ஒரு காரணமென்றாலும் நீங்கள் முடியை பராமரிக்கும் விதமும் ஒரு காரணம்.தினமும் ஷாம்பூ போட்டு குளிப்பது,அதுவும் மிக அதிகமா உபயோகப்படுத்துவது,தலை குளித்தால் சரியாக துவட்டாமல் இருப்பது,சுடு தண்ணீரில் குளிப்பது,அதிகம் தலைக்கு தொப்பியை உபயோகப்படுத்துவது(புதிதாக ஹெல்மேட் வேறு),தலைக்கும் வியர்த்தால் அப்படியே துடைக்காமல் விடுவது,வாரம் ஒரு முறை கூட தலையில் எண்ணெய் தேய்த்து விடாமல் இருப்பது அல்லது மசாஜ் செய்து விடாமல் இருப்பது,லேசாக முடி கொட்டினாலும் உடனே கண்டதையும் வாங்கி உபயோகிக்கத் துவங்குவது என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.தினமும் ஷாம்பூ போடாதீர்கள்.இரண்டு முறை போதும்.அதுவும் மிகவும் மைல்டான ஷாம்பூ பயன்படுத்துங்கள்.தலைக்கு தனித் துண்டு உபயோகியுங்கள்.Anti Dandruff ஷாம்பூ அடிக்கடி உபயோகிக்காதீர்கள்.வாரம் ஒரு முறை போதும்.வாரம் ஒரு முறை தலையில் எண்ணெய் தேய்த்து குளியுங்கள்.ஆண்கள் வெளியில் அதிகம் செல்வதால் மண்,தூசும் ஒரு காரணம்.வெளியில் சென்றுவிட்டு வந்தால் தலையை நன்கு உலர விடுங்கள்.தூங்கும் முன் தலையை மெதுவாக அழுத்தி மசாஜ் செய்து விடுங்கள் அல்லது பிரஷ்ஷால் வாரி விடுங்கள்.தலையணை உறையை அடிக்கடி புதுசாக மாற்றுங்கள்.ஒரு முறை பொடுகு வந்து போக்குவதற்கு ட்ரீட்மெண்ட் எடுத்தால் அன்றே சீப்பு,தலையணை உறையை புதிதாக அல்லது துவைத்து உபயோகியுங்கள்.
இப்படி செய்தால் முடிக்கொட்டுவது நிற்கும்.

புதிதாகப் பிறந்த குழந்தைகள் குளிப்பதற்கான நேரம்


சாதாரணமான முறையில், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பராமரிப்புக்கு வரும்போது, புதிய பெற்றோர் குளிப்பாட்டும் நேரத்தில்தான் அதிகம் பயப்படுகிறார்கள். முதல் இரு வாரங்களுக்கு, தொப்புள் கொடி நாண் விழுந்து மற்றும் தொப்புள் பகுதிப் புண் ஆறும்வரை, குழந்தையை ஓரு தொட்டியில் போடவேண்டாம். இந்த ஆரம்ப நாட்களில், ஒரு பஞ்சொற்றிக் குளியல் போதுமானது.


பஞ்சொற்றிக் குளியல்

ஒரு புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மாத்திரம் பஞ்சொற்றிக் குளியல் தேவைப்படும். உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் பஞ்சொற்றிக் குளியலுக்குத் தயாராகும்போது அறையை வெப்பமாக வைத்திருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், புதிதாகப் பிறந்த குழந்தைகள் வெற்றுடலில் குளிர்ந்த காற்றுப்படுவதை வெறுப்பார்கள். முன்கூட்டியே, ஒரு வெப்பமான ஷவர் ஒரு சில நிமிடங்களுக்கு ஓடச் செய்வதன்மூலம் உங்கள் குளியலறையை வெப்பமாக்கலாம். உங்களிடம் ஒரு மாற்று சிறு மெத்தை, ஒரு சிறிய பேசின்னில் வெதுவெதுப்பான நீர், ஒரு தண்ணீரில் நனைக்கப்பட்ட துடைக்கும்துணி, கொஞ்சம் பஞ்சுருண்டைகள், குழந்தைகளின் குளியல் சோப் கொஞ்சம், குழந்தைகளின் ஷம்பு, மற்றும் கையில் ஒரு மேலதிக துவாய் அல்லது சிறிய கம்பளித் துண்டு இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கைகளில் ஏதாவது மோதிரங்கள் அல்லது வேறு ஆபரணங்கள் இருந்தால் குளிப்பாட்டுவதற்கு முன்னர் அவற்றை அகற்றிவிடவும். ஏனென்றால் இவை உங்கள் குழந்தையைக் காயப்படுத்திவிடலாம்.
ஏதாவது தண்ணீர் கசிவதைப் பிடித்துக் கொள்ளுவதற்காக, ஒரு மாற்று மெத்தையை விரித்துவிடவும். சௌகரியமாக இருப்பதற்காக அதை ஒரு துவாயினால் மூடவும். உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் உடலின் ஒரு பாகத்தை கழுவத் தொடங்கும்போது, உடலின் மற்றப்பாகத்தை மற்றத் துவாய் அல்லது கம்பளியினால் மூடி மென்மையாகவும் அனலாகவும் வைத்துக்கொள்ளவும்.
உங்கள் குழந்தையின் ஒரு கண்ணை ஒரு புதிய, சற்று ஈரமாக்கப்பட்ட மென்மையான துணியினால் சுத்தம் செய்யவும். தொடர்ந்து உங்கள் குழந்தையின் முகத்தின் மற்றப் பாகங்களைத் துடைக்கவும். இதைச் செய்வதற்கு சோப் உபயோகிக்கத் தேவையில்லை.
குழந்தையின் உடலின் மற்றப் பாகங்களை மென்மையான சோப் போட்டுக் கழுவவும். உங்கள் குழந்தையின் உடலில்,அக்குள், மற்றும் காதின் பின்பகுதி போன்ற மடிப்புள்ள பகுதிகளைச் சுத்தம் செய்யவும். டயபர் பகுதியை கடைசியில் கழுவுவதற்கு நிச்சயமாயிருங்கள். உங்கள் குழந்தையின் காதுகளின் உட்பகுதி, போன்ற துவாரமுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்யத் தேவையில்லை. ஏனென்றால் இவை தம்மைத் தாமே சுத்தம் செய்துகொள்ளும். நீங்கள் சோப் போட்ட உடலின் எல்லாப் பகுதிகளையும் கழுவிவிடுவதில் நிச்சயமாகவிருங்கள்.
அதிக பட்சம், வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறைகள் உங்கள் குழந்தையின் தலைமுடிக்கு ஷம்பூ போடவும். இதைச் செய்வதற்கு, உங்கள் குழந்தையின் தலையை உங்கள் கையால் தாங்கிக்கொண்டு, தொட்டிலில் தாலாட்டுவதுபோல காற்பந்துப்பிடியில் வைத்துக் கொள்ளவும். தண்ணீர்த் தொட்டிக்குமேலாக அவனது தலையைப் பிடித்துக்கொண்டு, தலைக்கு மேலாக வெதுவெதுப்பான தண்ணீரை மென்மையாகத் தெளிப்பதற்கு உங்கள் கையை உபயோகிக்கவும். தண்ணீர்க் குழாயின் கீழே உங்கள் குழந்தையின் தலையை நேரடியாகப் பிடிக்கவேண்டாம். சிறிதளவு பேபி ஷம்பூவினால் நுரை உண்டாக்கி, நன்கு அலசிக் கழுவவும். உடனேயே துவாயால் உலர்த்திவிடவும்.
உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் பஞ்சொற்றிக் குளியல் முடிந்தவுடன், மென்மையாக ஒரு துவாயினால் சுற்றி கைகளினால் மெதுவாகத் தட்டி அவனை உலர வைக்கவும்.

குழந்தையின் குளியல் தொட்டி

உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் தொப்புள்கொடி நாண் விழுந்து அந்தப் பகுதி நிவாரணமடைந்த பின்னர் அவனை குளிப்பதற்காக குளியற் தொட்டியில் போட ஆரம்பிக்கலாம். உங்கள் குழந்தை ஓரு வளர்ந்தவரின் ஆதரவு இல்லாமல் சமநிலையில் இருக்கக் தொடங்கும்வரை, அவன் “பெரிய” குளியல் தொட்டி உபயோகிக்கத் தயாராயிருக்கமாட்டான்.
சில பெற்றோர்கள் ஒரு சிறிய பிளாஸ்ரிக் குளியல் தொட்டியை உபயோகிக்க விரும்புவார்கள்; மற்றவர்கள் தண்ணீர்த் தொட்டியை உபயோகிக்க விரும்புவார்கள். நீங்கள் ஒரு குழந்தைக் குளியல் தொட்டி வாங்குவதானால், அடியில் துவாரமுள்ள குளியல் தொட்டியை வாங்க முயற்சிக்கவும். அதனால், குளியல் முடிந்தவுடன் தண்ணீரை இலகுவாக வெளியே வடித்து விட முடியும். சமயலறைத் தண்ணீர்த் தொட்டியுடன் பொருந்தக்கூடிய குழந்தைக் குளியல் தொட்டிகளும் இருக்கின்றன.
உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டுவதற்குத் தயாராகும்போது, அறை போதியளவு வெப்பமுள்ளதாக இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கைகளிலிலிருக்கும் மோதிரம் அல்லது வேறு ஆபரணங்களை கழற்றிவிடவும். ஒரு கோப்பை, ஒரு குழந்தையைக் கழுவும் துணி, மென்மையான சோப், குழந்தைக்கான ஷம்பு, மற்றும் அருகில் ஒரு மென்மையான துவாய் என்பனவற்றை வைத்துக் கொள்ளவும். குளியல் தொட்டியை 5 முதல் 7 செமீ (2 முதல் 3 அங்குலங்கள்) வெதுவெதுப்பு நீரால் நிரப்புவதற்காக கோப்பையை உபயோகிக்கவும். உங்கள் மணிக்கட்டின் உட்பகுதியை உபயோகித்து தண்ணீரின் வெப்பநிலையைச் சோதித்துப் பார்க்கவும்.
உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் தலை மற்றும் கழுத்தை உங்கள் கையால் தாங்கிப் பிடிக்க நிச்சயப்படுத்திக்கொண்டு, அவனது தலையை மெதுவாகத் தண்ணீருக்குள் தாழ்த்தவும். உங்கள் குழந்தையின் முகத்தைத் துடைப்பதற்கு சோப்பில்லாமல் கழுவும் துணியை உபயோகிக்கவும். பின்பு அவனது உடலில் சோப் போட்டு அலசிவிடவும் உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையை சூடாக வைத்திருப்பதற்காகத் தொடர்ச்சியாக இளஞ்சூட்டு நீரை அவனது உடலில் ஊற்றினால் அவன் தனது குளியலை சந்தோஷமாக மகிழ்ந்தனுபவிப்பான்.
உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் தலைமுடியை மென்மையான ஷம்புவினால் கழுவவும். அவனது தலையின் மேற்பாகம் முழுவதும் ஷம்புவினால் மசாஜ் செய்யவும். ஷம்புவை உங்கள் கைகளால் அல்லது ஓரு கோப்பை நீரினால் அலசி விடவும்.
உங்கள் குழந்தையைக் குளிப்பாட்டி முடிந்ததும், ஒரு துவாயால் சுற்றி மெதுவாகத் தட்டி அவனை உலர விடவும். உங்கள் குழந்தையின் தோல் உலர்ந்து போகாமல் இருப்பதற்காகச் சில பேபி லோஷன்களை உபயோகிக்க நீங்கள் விரும்பலாம்.

பாதுகாப்புக்கான ஆலோசனைகள்

உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை குளியல் தொட்டிக்குள் இருக்கும்போது அவனைத் தாங்கிப் பிடித்துக்கொள்வதற்கு எப்போதும் நிச்சயமாயிருங்கள். குளிப்பாட்டும்போது அவனைத் தனியே விட்டுவிடவேண்டாம். அல்லது வேறொரு பிள்ளையின் மேற்பார்வையில் விட்டுவிடவேண்டாம். உங்கள்புதிதாகப் பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டும்படி குழந்தைப் பராமரிப்பாளரைக் கேட்டுக்கொள்ள முயற்சிக்கவேண்டாம். குளியல் வளையங்கள் மற்றும் குளியல் இருக்கைகள் சிபாரிசு செய்யப்படவில்லை.
கடைசி ஆனால் முடிவானதல்ல, சுடு நீர்க் குளியல், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் மென்மையான தோலைச் சுட்டுவிடும் என்பதை எப்போதும் நினைவில் வைக்கவும். உங்கள் குழந்தையைக் குளியல் தொட்டியில் வைப்பதற்கு முன்பாக தண்ணீர் சூடானதாக அல்ல வெதுவெதுப்பானதாக இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.

வித விதமான படங்கள்

வித விதமான படங்கள் பார்த்திருப்பீர்கள் இதையும் பாருங்கள் 



நல்ல இருக்க....அப்போ  ஓடு போடுங்க 

Saturday, 19 February 2011

வாழை மரம்

வாழைமரம் பலவகைகள் உண்டு அவற்றின் ஒரு சிலசெய்திகள் பார்போம் வாழை மரங்கள் உண்மையில் மரங்கள் இல்லை. அதாவது வாழை மரம் என்று நாம் கூறுவது தவறு. அது ஒரு தாவரம். ஏன் எனில் மரங்களில் உள்ளது போல் கடினமான தண்டுப் பகுதியோ, கிளைகளோ இருப்பதில்லை.

தாவரங்களைப் போல பூத்துக் காய்த்தபின் இறந்துவிடுகின்றன. எனவே உலகிலேயே பெரிய தாவரம் வாழை மரம் என்று கூறப்படுகிறது. வாழை அதன் வகையில் தாவரம் என்றாலும், நமக்கு அது மரம் என்றுதானே அறிமுகமானது. எனவே அவ்வாறே இதில் கூறுவோம். வெப்பம் மிகுந்த ஈரமான காலநிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன. இதற்கான நிலப் பகுதியில் நல்ல நீர்ப்பாசன வசதி இருக்க வேண்டும்.

வாழை ஆசியாவில் தோன்றியது என்றாலும், அது மற்ற வெப்ப மண்டலக் கண்டங்களான ஆபிரிக்கா, தென் அமெரிக்கா போன்றவற்றுக்குப் பரவியது.


வாழைப்பழம் விளைவிப்பதில் உலகிலேயே உச்சத்தில் நிற்பது நமது இந்தியாதான். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 170 இலட்சம் தொன் வாழைப்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி என்ற எதுவும் வீணாகாது.

மேலும், வாழைப்பழக் கழிவுகள் காகிதமாக மாற்றப்படுகின்றன. வாழை இழைகளைக் கொண்டு பட்டுப் போன்ற மென்மையான துணிகள் நெய்யப்படுகின்றன. ஜப்பானில் பாரம்பரிய கிமோனோ ஆடைகளை உருவாக்கவும், நேபாளத்தில் கம்பளம் தயாரிக்கவும் வாழை இழைகள் பயன்படுத்தப்படுகின்றன

வாழை மரம் பற்றிய ஒரு பாடல்  

மனித எலும்புகள் (படித்தவை )


பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுதான் முதுகெலும்பு  உயிரினங்கள். இந்தஉயிரினங்களுக்கு எலும்புகள் தான் உடலமைப்பை கொடுக்கின்றன.  அவற்றின் தகவமைப்புக்கு ஏற்ப எலும்புகள் அமைந்துள்ளன.  ஊர்வன பறப்பன, பாலூட்டிகளில் மனிதனும் அடக்கம்.  மனிதஎலும்புகள் விசித்திரமான அமைப்பு கொண்டவை.  அவைதான் மனிதனை  நிமிர்ந்து நடக்கச் செய்கின்றன.  மனிதனின் செயல்பாட்டிற்கும் ஆதாரமாக உள்ளன.  இந்த மனித எலும்புகளின் தன்மைகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். எலும்பு என்பது மனிதனின் உடலுக்குள் காணப்படும் விறைப்பான, கடினத்தன்மை கொண்ட உறுப்பாகும்.  உடல் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக அமைந்து உடலைத் தாங்கும் உறுப்புகள்தான் எலும்புகள்.  மனிதனின் உடலமைப்பை நிர்ணயம் செய்வது எலும்புகள் தான்.  ஒரு இடம் விட்டு ஒரு இடத்திற்கு நகர வைப்பதும் எலும்புகள்தான்.  இவைகள் பாதிக்கப் பட்டால் மனிதன் அலங்கோலமான ஜந்துவாக மாறிவிடுவான்.  எலும்புகள் உடல் உறுப்புகளை பாதுகாப்பதுடன் இரத்த சிவப் பணுக்கள், வெள்ளையணுக்கள் இவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகவும் உள்ளன. மேலும் கனிமங்களை சேகரித்து வைக்கும் சேமிப்பு கூடமாகவும் எலும்புகள் உள்ளன.
பொதுவாக எலும்புகள் பலவகையான வடிவங்களில் அமைந்துள்ளன.  இவற்றில் சில சிறியனவாகவும், பெரியனவாகவும் காணப்படும்.  அதுபோல் மிகவும் உறுதியான எலும்புகளும்  உறுதி குறைந்த எலும்புகளும் உள்ளன.  இவை மனிதனின் அனைத்து உறுப்புகளையும் பாதுகாப்பதற்கு தகுந்தவாறு உள்ளன.
எலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒருவகை கனிமங்கள் நிறைந்துள்ளன.  இவை தேன் கூட்டு அமைப்பை ஒத்துக் காணப்படும்.  முப்பரிமாண உள்ளமைப்புகளைக் கொண்டு எலும்புகளுக்கு விரைப்புத் தன்மையை கொடுப்பது எலும்புத் திசுக்கள்தான்.  மேலும் எலும்புகளில் எலும்பு மஜ்ஜை, எண்புழை, நரம்பு, இரத்த அணுக்கள், குருத்தெலும்பு போன்றவை அடங்கும்.
உடலுக்கு ஆதாரமாக இருப்பதுடன் தசை நரம்புகளுக்கு பற்றுக் கோளாகவும் இருப்பது எலும்புத் கூடுதான்.மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்றவாறு எலும்புகள் 
அமைந்துள்ளன.  இந்த எலும்புகளில் 50 சதவீதம் நீரும், 33 சதவீதம் உப்புக்களும் 17 சதவீதம் மற்ற பொருட்களும் அமைந்துள்ளன.
எலும்பில் கால்சியம், பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக் கூடிய தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன.  நமது உடல் நலத்திற்குத் தேவையான கால்சியம் சத்துக்கள் அனைத்தும் எலும்புகளில்  தான் சேமித்து வைக்கப்படுகின்றன.  இந்த கால்சியம் சத்துக் குறைந்தால் எலும்புகள் பலமிழந்து எளிதில் உடைந்துவிடும்.
எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தியிருந்தால் தான் சீரான முறையில் அவைகள் செயல்படமுடியும்.  அவ்வாறு பொருந்தும்  இடங்களுக்கு மூட்டுகள் என்று பெயர். அசையும் மூட்டு, அசையா மூட்டு என இரு வகை மூட்டுகள் உள்ளன.  தலையிலும், இடுப்பிலும் காணப்படும் எலும்புகள் அசையா மூட்டுகள் ஆகும்.  அசையும் மூட்டுகள் நான்கு வகைப்படும்.
பந்துக்கிண்ண மூட்டு
கீழ்  மூட்டு
வழுக்கு மூட்டு
செக்கு மூட்டு
இந்த நால்வகை அசையும் முட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ, தேய்மானமோ ஏற்படாமல் இருப்பதற்கு எலும்புகளின் முனையில் குருத்தெலும்புகள் மூடப்பட்டு அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் அமைந்து அதில் ஒரு வழுவழுப்பான திரவம் சுரந்து மூட்டுகளின் செயல்பாடுகளை எளிதாக்குகிறது.  மேலும் மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவாமல் இருக்க தசை நார்களால் பின்னப்பட்டுள்ளன.
எலும்புகளில் சின்ன எலும்பு காதில் உள்ள ஏந்தி(ண்tச்ணீஞுண்) என்ற எலும்பாகும்.  மிகப் பெரிய எலும்பு தொடை எலும்பாகும்.  மனிதனின் மார்புக் கூட்டில் மார்பெலும்புடன் விலா எலும்புகள் 24 உள்ளன.  இவை 12 ஜோடியாக ஒரு கூடுபோல் காட்சியளிக்கும்.   இவைகள் இதயம், நுரையீரல், போன்றவற்றை பாதுகாக்கிறது.
சாதாரணமாக பிறந்த குழந்தைக்கு 306 எலும்புகள் காணப்படும்.  பின் குழந்தை வளரும்போது படிப்படியாக பல எலும்புகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிய வலுவான எலும்பாக மாறும்.  நன்கு வளர்ச்சியடைந்தமனிதனுக்கு 206 எலும்புகள் இருக்கும்.
தலைப்பகுதியில் அதாவது மண்டையோட்டில் 8 எலும்புகள் உள்ளன.  அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து கடினமாக உள்ளன.
மண்டையறை எலும்புகள்     – 8
முக எலும்பு             – 14
காது எலும்புகள்         – 6 
(மேலஸ், இன்கஸ், ஸ்டேப்பிஸ்)
தொண்டை எலும்பு         – 1
தோள்பட்டை எலும்பு    – 4
(காறை எலும்பு – 2,  தோள் எலும்பு – 2)
மார்புக் கூட்டில்         – 25
(மார்பெலும்பு – 1, விலா எலும்பு – 24)
முதுகெலும்புத் தூண்          – 24
மேற்கைகளில்          – 6
கைகளில்             – 54
இடுப்புக்கூடு             – 4
கால்களில்            – 8
கால்களின் கீழ் பகுதியில்     – 52
மொத்தம் 206 எலும்புகள் உள்ளன.  இந்த எலும்புகளின் அளவுகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும்.  எலும்புகளைச் சுற்றி நரம்புகள், தசை, தமணி, தசை நார்கள் போன்றவை பின்னிப் பிணைந்துள்ளன.
இந்த எலும்புகளின் சேமிப்புகளிலிருந்துதான் உடல் தேவையான கால்சியம், பாஸ்பேட் சத்துக்களை எடுத்துக்கொள்கிறது.
இதனால் முதுமையில் எலும்புகள் போதிய பலமின்றி காணப்படுகின்றன.  இந்த எலும்புகள் நன்கு திடமாக இருக்க வைட்டமின் டி அதிகம் தேவை.  வைட்டமின் டி குறைபாடு உண்டானால் எலும்பு மெலிவு நோய் உண்டாகும்.  இதனால் எலும்புகள் கால்சியம் சத்தை சேமித்து வைக்க இயலாமல் போய்விடும்.  இந்த எலும்பு மெலிவு நோய்க்கான
மனிதனின் இடுப்பு எலும்பு
அறிகுறிகள் எளிதில் கண்டறிய முடியாது.  ஆனால் இவை வராமல் தடுக்க பல வழிமுறைகள் உள்ளன.சிறு குழந்தைகளுக்கு சூரிய வெளிச்சம் படுவது நல்லது.  இந்த சூரிய ஒளியில்தான் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி அதிகம் கிடைக்கும்.  இதுதான்  குழந்தைகளின் வளர்ச்சிக்கும், வலுவுக்கும் முக்கியமானது.
மேலும் எலும்புகள் பலப்பட கால்சியம் சத்து அதிகம் தேவை.  இதனால் அதிக அளவு கால்சியம் சத்து நிறைந்த தண்டுக்கீரை,  காரட், ஆரஞ்சு, பாதாம் பருப்பு, முட்டைக்கோஸ், தவிடு நீக்காத கோதுமை போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  இதுபோல் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணெய், முளை கட்டிய கொண்டைக்கடலை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.



நன்றி: விதை 

Friday, 18 February 2011

குழந்தைகளும் விளையாட்டும்

குழந்தைகளும் விளையாட்டும் பிரிக்க முடியாதவை. அவர்களுக்கு எல்லாமே விளையாட்டுதான். அம்மா ஆயிரம் விஷயங்களை எண்ணி குழம்பித் திரிந்தாலும் குழந்தை அவளின் கால்களை கட்டிக்கொண்டு விளையாடத்தான் செய்யும்.

குழந்தைகளின் விளையாட்டில் பெற்றோருக்கும் மகிழ்ச்சி உண்டு. 6 மாதக் குழந்தை கை, கால்களை மட்டுமே ஆட்டி விளையாடும். ஆனாலும் பேசத்தெரியாத அந்தக் குழந்தையிடம் தன்னையே மறந்து பேசிக் கொண்டு மற்ற எல்லாக் கவலைகளையும் மணிக்கணக்கில் மறந்துவிடும் பெற்றோர்தானே எல்லோருமே!

***

புன்சிரிப்புடன் கொழுகொழுவென்று இருக்கும் குழந்தைகள் விளையாடும்போது மேலும் அழகாகிவிடுகிறார்கள். விளையாட்டின் மூலம்தான் அவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். விளையாட்டால் அவர்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. கைகளையும், கால்களையும் ஊன்றி தவழ்ந்து வரும் குழந்தையை பெற்றோர்கள் கைதட்டி `வா…வா…’ என்று உற்சாகமாக அழைப்பார்கள். சிரித்துக் கொண்டே வேகமாகத் தவழத்தொடங்கும் குழந்தை வெகுசீக்கிரமே எழுந்து நடக்கத் தொடங்கிவிடும். வாழ்க்கையிலும் இப்படித்தான் விளையாட்டு உங்கள் குழந்தையை வேகமாக உயரச் செய்யும்.

***

பிறந்த 3 மாதத்திலேயே குழந்தைகள் விளையாடத் தொடங்கிவிடும். 6 மாதம் வரை ஒலியெழுப்பும் பொம்மைகள், அசையும் பொருட்களே இவைகளின் விளையாட்டுத் தோழன். இந்த வயதுக்கு குழந்தைகள் விளையாட்டுச் சாமான்களை பற்றிப்பிடிக்க முயற்சி செய்யும். சத்தம் வரும் திசையில் திரும்பிப் பார்க்கும். பொருட்களை பின்பக்கமாக வைத்துவிட்டால் உருண்டோ, திரும்பியோ பொருளை பார்க்கும். இந்த விளையாட்டுகளால் குழந்தைகள் சுற்றுச்சூழலை கவனிக்கத் தொடங்குகின்றன. மூளைவளர்ச்சி அதிகமாகும். ஒளிரும் செல்போன்கள் இந்தக்கால குழந்தைகளை வெகுவாக கவர்ந்துவிடுகிறது.





6 முதல் 10 மாதம் வரை உள்ள குழந்தைகள் புதிய புதிய பொம்மைகளைகளுடன் விளையாட பிரியப்படும். விசை கொடுப்பது, பட்டன் அழுத்துவதன் மூலம் இயங்கும் பொம்மைகளிடம் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பொம்மைகளுடன் விளையாட விரும்பும். அவற்றை தானே இயக்கிவிடும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இது தவழும் பருவம் என்பதால் இயங்கும் பொம்மைகளை பின்தொடர முயற்சிப்பார்கள்.

இந்த விளையாட்டுகள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை முந்தைய நிலையைவிட வேகப்படுத்தும்.

***

ஒன்றேகால் வயது வரையுள்ள குழந்தைகள் நகரும் பொம்மைகளைப் பின்தொடர்ந்து செல்வார்கள். தள்ளுவண்டியின் மூலம் நடை பழகுவார்கள். மற்ற குழந்தைகளின் பின்னால் செல்லத் தொடங்குவார்கள். டப்பாக்களில் மணல் சேகரித்தல், சிதறிய பொருட் களை அடுக்குதல் போன்றவற்றில் ஆர்வம் காட்டுவார்கள். இந்த வயதில்தான் கதைகேட்கும் ஆர்வமும் அதிகமாக இருக்கும். அப்போது கதை சொல்லி வளர்க்கத் தொடங்கினால் உங்கள் குழந்தைகள் புத்திசாலியாக வளருவார்கள். இது அறிவு, உடல்வளர்ச்சியின் முக்கியமான பருவம். இதற்கு விளையாட்டு மிக மிக அவசியம்.

***

2 வயது வரையுள்ள குழந்தைகள் அறிவுத்திறன் விளையாட்டுகளை கற்றுக் கொள்ளும். பல நிறங்களை அடையாளம் காட்டும், புகைப்படங்களில் இருக்கும் நபர்களைக் கேட்டாலும் காட்டிவிடும். பொம்மைகள் எப்படி இயங்குகின்றன என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும். பந்து எறிவது, குழாயைத் திருப்புவது போன்ற சிறு பணி சார்ந்த விஷயங்களையும் செய்யும்.

ஓடி ஆடி விளையாடுவதால் கால்களும், உடலும் பலம் பெறும். மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதால் நிறைய அனுபவங்களை கற்றுக்கொள்வார்கள்.

***





2-3 வயது குழந்தைகள் விளையாடச் சென்றுவிட்டு சரியாக வீட்டிற்கு வந்துவிடுவார்கள். பந்தை உதைப்பார்கள், பிடிப்பார்கள். தடுமாறாமல் ஓடிவிளையாடுவார்கள். மணலில் வீடுகட்டி விளையாடுவது, டயரை உருட்டி விளையாடுதல், சுவர்கள், பெஞ்சுகளில் ஏறி விளையாடுவது போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த விளையாட்டுகளால் உடல் பலம் பெறும். பல குழந்தைகளுடன் விளையாடுவதால் அறிவு வளர்ச்சி வேகமாக இருக்கும். போட்டோவில் தன்னை அடையாளம் கண்டுபிடித்துவிடும்.

***

குழந்தைகள் விளையாட்டின் மூலம் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் ஏராளம். அவர்களின் உடலும், உள்ளமும் பலம் பெறுகிறது. சுற்றுச்சூழலை உணர்ந்து கொள்கிறார்கள். அறிவுத்திறன் வளர்கிறது. நண்பர்கள், பாசம், பிரிவு, வெற்றி, தோல்விகளை அறிந்து கொள்கிறார்கள். சமூகத்தை புரிந்துகொள்ளுதல் மற்றும் சமூக அக்கறை வளர்கிறது.

அதிகம் அடாவடி செய்வதாக நினைத்து பெற்றோர் குழந்தைகளின் விளையாட்டிற்கு தடை விதிக்கக்கூடாது. அவர்களின் சிறுசிறு வெற்றிகளையும் ஊக்குவித்து பாராட்டினால் அவர்கள் வெற்றியாளர்களாக வளருவார்கள்.

மானிட்டர்கள்

"வாங்கும் முன் க‌வ‌னிக்க‌" வ‌ரிசையில் இந்த முறை மானிட்டர்கள் எனப்படும் கணினிகளின் திரைகள் பற்றி பார்க்கலாம். மடிக்கணிணிகளே மிகுதியாகிப்போன இன்றைய சூழலில் கணித்திரைகள் தேவையில்லையே எனினும், சில பல காரணங்களுக்காக கணிணி மானிட்டர்கள் உங்களுக்குத் தேவைப்படலாம். குறிப்பாகச் சொல்லப்போனால் சாதாரண மடிக்கணிணியின் சிறிய திரை அளவு மற்றும் சிறிய எழுத்துரு அளவுகள் உங்கள் கண்பார்வைக்கு வசதியாக இல்லாத போது ஒரு பெரிய மானிட்டர் வாங்குவதை குறித்து யோசிக்கலாம். அல்லது வொர்க் ஃப்ரம் ஹோம் செய்பவர்கள் மடிக்கணிணி திரை மட்டுமல்லாமல் இன்னொரு ஸ்கீரீன் கூட (Dual screen) இருந்தால் வேலை செய்ய இன்னும் எளிதாக இருக்குமே என எண்ணினால் நீங்கள் கூடுதலாக ஒரு மானிட்டர் வாங்குவதை குறித்து யோசிக்கலாம். அப்போது நினைவில் வைக்க வேண்டிய சில குறிப்புகள். 

1.திரை அளவு: 
பல்வேறு Screen Size-களில் வரும் கணித்திரைகள் இஞ்சு அளவுகளில் குறிப்பிடப்படுகின்றன. 21” முதல் 23” அளவு வரையான மானிட்டர்கள் பிரபலம். இந்த இஞ்ச் அளவுகள் டயகணல் அளவுகளாகும். அதாவது வலது மேல் மூலையிலிருந்து இடது கீழ் மூலைவரையான இஞ்ச் அளவாகும் (படம்). விலையில் உங்களுக்கு தகுதியானதை தேர்வு செய்து கொள்ளலாம். 

2.திரைத் தரம்: 
பெரும்பாலும் LCD மானிட்டர்கள் தான் மார்கெட்டில் உள்ளன.VN,TN,IPS போன்ற LCD நுட்பங்கள் உள்ளன. இதில் In-Plane Switching எனப்படும் IPS பேனல்கள் பெட்டர்.அவை LED Backlight ஆக இருந்தால் இன்னும் உச்சிதம். Dead pixels எதுவும் இல்லாமல் இருந்தால் அது நம் அதிஷ்டம். HD எனப்படும் High Definitionஅளவில் 1080p இன்றைய சராசரி உச்சம். ரெசல்யூசனுக்கு 1920x1080 அளவை உச்சமாக கொள்ளலாம். அகல திரையாக அதாவது wide screen-னாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். 

3.போர்ட்டுகள்: 
ஒன்றுக்கும் மேல் HDMI போர்ட்கள் இருப்பது மிகவும் நல்லது.ஒரு வேளை உங்கள் கணிணி கொஞ்சம் பழையதுவெனில் VGA போர்ட்டை பயன் படுத்துவீர்கள். 

4.ஸ்பீக்கர் மற்றும் டிவி டியூனர்: 
பெரும்பாலான மானிட்டர்கள் தன்னுடன் ஸ்பீக்கருடன் வருவதில்லை. சில மானிட்டர்கள் ஸ்பீக்கர்களை இணைக்க வழி கொண்டிருக்கும். அப்படியெனில் ஒலியையும் ஒளியையும் ஒரே வயரில் கடத்தும் HDMI போர்ட் கண்டிப்பாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு வேளை உங்கள் மானிட்டரை டிவியாகவும் பயன்படுத்த யோசனை இருந்தால் டிவி டியூனர் உள்ள மானிட்டராக வாங்கவும். கொஞ்சம் விலை அதிகமாயிருக்கும். 

5.இன்னும் பிற:
 
மானிட்டரின் ஸ்டைல், எடை மற்றும் கனத்தை கூட சிலர் கருத்தில் கொள்ளவேண்டி வரும்.கேமிங்குக்காக நீங்கள் இந்த மானிட்டரை பயன்படுத்துவதாக இருந்தால் Response Time 2ms ஆக இருப்பது நல்லது. மானிட்டரின் ஸ்டாண்ட் மற்றும் அதை திருப்பும், உயர்த்தும் வசதிகளும் உங்களுக்கு பொருத்தமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுவது நல்லது. 

பிகு: 
LCD திரைகளின் Stuck மற்றும் Dead pixels-களையும் பிளாஸ்மா திரையின் screen burn-in-களையும்JScreenFix தீர்ப்பதாக கேள்வி. தேவைப்படுவோர் முயன்று பார்க்கலாம். 



மாங்கல்ய தத்துவம்: 
திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு அணிவிக்கப்படும் திருமாங்கல்யம் ஒன்பது இழைகளால் ஆனது. இதன் இழைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தத்துவம் உள்ளது. 1.வாழ்க்கையை புரிந்துகொள்
2.வாழ்க்கையில் மேன்மை
3.ஆற்றல்
4.தூய்மை
5.தெய்வ பக்தி
6.உத்தம நிலை 
7.விவேகம்
8.தன்னடக்கம் 
9.தொண்டு செய்தல் 

Tuesday, 15 February 2011

எனக்கு ஈகோ இல்லை

தமிழில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிக்கும் காலம் எல்லாம் கடந்து விட்டது. ஈகோ இல்லாமல், எவருடனும் சேர்ந்து நடிக்கும் எண்ணம் எல்லா ஹீரோக்களுக்கும் வர வேண்டும். தற்போது வளர்ந்து வரும் இளம் ஹீரோக்கள் சிலர் ஈகோ இல்லாமல், எவருடனும் சேர்ந்து நடிப்பது தமிழ் சினிமாவிற்கு நல்ல அரோக்கியத்தை தந்திருக்கிறது. அப்படி ஈகோ இல்லாமல், எவருடனும் சேர்ந்து நடிப்பேன் என்று சக நடிகர்களிடம் மச்சான் உறவை ஸ்திரப்படுத்திக் கொண்டவர் ஜீவா. சைலண்டாக முன்னேறிக் கொண்டிருக்கும் ஜீவா, இன்றைய தேதியில் அதிக படங்கள் கையில் வைத்திருக்கும் நடிகர். தற்போது இளைய தளபதி விஜய்யுடன் இணைந்து நடிப்பதில்ஆவலுடன் இருப்பதாக ஜீவா கூறியுள்ளார். இதன் மூலம் நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்கிறேன் என்று ஜீவா கூறினார்.

கண்தானம் செய்த நடிகை

புன்னகை அரசி என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் நடிகை சினேகா தனது கண்களை இன்று தானம் செய்தார். இதற்கான படிவத்தின் கையெழுத்திட்டு ராஜன் ஐ கேர் மருத்துவமனைக்கு அவர் வழங்கினார். பல்வேறு சமூக பணிகளில் ஆர்வம் காட்டி வரும் சினேகா சமீபத்தில் கூட போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் ரோட்டரி கிளப் முயற்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் தன்னை அந்த அமைப்பில் இணைத்துக் கொண்டு நிதியுதவியும் செய்தார்.

இப்போது தனது கண்களை தானம் செய்துள்ளார் சினேகா. இதற்கான நிகழ்ச்சி இன்று காலை சென்னை ராஜன் ஐ கேர் மருத்துவமனையில் நடந்தது. கண்தான பத்திரத்தில் கையெழுத்திட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கிய சினேகா, “கண்தானம் செய்வதன் மூலம், வாழ்க்கையை தொடர்ந்து வாழும் வாய்ப்பு கிடைக்கிறது” என்றார்.