தளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

palane

கிளிக் பண்ணுங்கோ

Tuesday, 26 April 2011

winBoss Classic

விண்டோசில் உள்ள ஏதாவது அப்ளிகேஷனை நீக்கள் இயக்கிக் கொண்டிருக்கிறீர்கள் ,திடீரென்று ஒருவர் உங்கள் அருகில் வந்து விட்டார் ,அவர் கண்களில் இருந்து அந்த அப்ளிகேஷனை சடாரன மறைக்க விரும்புகிறீகள் .எப்படி மறைப்பது ? winBoss Classic சாப்ட்வேர் உங்களிடம் இருந்தால் எளிதாக ,வேகமாக அப்ளிகேஷனை மறைக்கலாம் .

இந்த winBoss Classic சாப்ட்வேரை நிறுவி ,பின்பு அதை இயக்கிக் கொள்ளுக்கள் .பிறகு வழக்கமான உங்கள் வேலைகளை கம்ப்யூட்டரில் செய்யுங்கள் .திடீரென ஒருவர் பக்கத்தில் வந்து விட்டால் ctrl +*Num கீகளை அழுத்துங்கள் .நீங்கள் அதுவரை வேலை செய்து கொண்டிருந்த அப்ளிகேசன் உடனடியாக மறைந்து விடும் .நீங்கள் மறைத்த அப்ளிகேசனிற்கான பட்டனை டஷ்க்பாரில் பார்க்க முடியாது ;Alt+Tab  கீகளை அழுத்தி அந்த அப்ளிகேஷனை மீட்க முடியாது ; Task Manager காட்டுகிற பட்டியலிலும் அந்த அப்ளிகேசனின் பெயரைப் பார்க்க முடியாது .அருகில் வந்த நபர் அந்த பக்கம் சென்றுவிட்டால் ,அந்த அப்ளிகேஷனை அழைத்து ,அதன் பாப்அப் மெனுவில் உள்ள ,நீங்கள் மறைத்த அப்ளிகேசனின் பெயரைக் கிளிக் செயுங்கள் .அது மீண்டும் திரையில் தோன்றும் .அப்ளிகேஷனை மறைக்க ctrl +*Num கீகளுக்குப் பதில் நீங்கள் விரும்பிய கீகளையும் கொடுக்கலாம் .

Download link:http://download.cnet.com/WinBoss/3000-2072_4-10521160.html 

பயன்படுத்தி பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள் . 

0 comments:

Post a Comment